1
00:00:02,000 --> 00:00:07,000
Downloaded from
YTS.BZ

2
00:00:08,000 --> 00:00:13,000
Official YIFY movies site:
YTS.BZ

3
00:00:48,500 --> 00:00:55,457
த லாஸ்ட் சன்ரைஸ்

4
00:00:55,458 --> 00:00:57,458
என் உடம்பே எனக்கு எதிரியாயிடுச்சு.

5
00:00:59,916 --> 00:01:02,583
ஆனா இப்போ நான் பூமியோட
ஒரு துகளா இங்க இருக்கேன்.

6
00:01:04,375 --> 00:01:08,875
இந்த கடலுக்கு நோய் பத்தியோ இல்ல வாழ்க்கை,
மரணம் பத்தியோ எந்தக் கவலையும் இல்ல.

7
00:01:09,958 --> 00:01:12,375
நம்ம போராட்டங்கள்,
நம்ம வலி, இல்ல இந்த மாதிரி

8
00:01:14,583 --> 00:01:17,375
ஒரு கடைசி கோடை காலத்துக்காக
நான் எதை வேணும்னாலும் கொடுத்து

9
00:01:18,708 --> 00:01:20,416
இருப்பேன் என்பதை பத்தி
இதுக்கு கவலை இல்ல.

10
00:01:22,458 --> 00:01:23,666
ஒரு கடைசி சூரிய உதயம்…

11
00:01:25,750 --> 00:01:26,583
அவன் கூட.

12
00:01:30,875 --> 00:01:34,291
{\an8}3 மாதங்களுக்கு முன்பு
ஹூஸ்டன், டெக்சாஸ்

13
00:02:27,166 --> 00:02:28,833
ரய். ரய்.

14
00:02:34,708 --> 00:02:35,541
ரய்!

15
00:02:36,541 --> 00:02:39,083
நகருங்க, நகருங்க, நகருங்க!
ரய், ஒண்ணும் இல்ல. ஒண்ணும் இல்ல.

16
00:02:39,666 --> 00:02:42,375
ஒண்ணும் இல்ல. மூச்சு விடு. மூச்சு விடு,
ரய். நீ மூச்சு விடணும், செல்லம்.

17
00:02:46,166 --> 00:02:49,291
இந்தச் சூழ்நிலையில ஒரையா, கண்டிப்பா
ஒரு அறுவை சிகிச்சை பண்ணிக்கச் சொல்வேன்.

18
00:02:50,000 --> 00:02:52,165
{\an8}அந்தத் தழும்புகளை அகற்ற
இன்னும் வாய்ப்பு இருக்கு,

19
00:02:52,166 --> 00:02:53,833
{\an8}அதனால உனக்கு வலிப்பு வராம இருக்கலாம்.

20
00:02:54,583 --> 00:02:56,875
{\an8}அதே அளவுக்கு என் ஞாபக சக்தியை
இழக்கவும் வாய்ப்பு இருக்கு.

21
00:02:58,666 --> 00:03:02,666
{\an8}மனுஷங்க, இடங்கள், எப்படி நடக்கணும், எப்படி
ஆடணும், எப்படி வாழணும்னு எல்லாமே.

22
00:03:03,583 --> 00:03:05,374
என்னை ஒரு மனுஷியா காட்டுற
எல்லாமே போயிடும்.

23
00:03:05,375 --> 00:03:07,207
நாம உன் வாழ்க்கையைப் பத்திப் பேசுறோம்.

24
00:03:07,208 --> 00:03:08,916
அதான், அம்மா, இது என் வாழ்க்கை.

25
00:03:10,166 --> 00:03:11,874
{\an8}சரி, நாம மருந்து அளவை அதிகப்படுத்தலாம்,

26
00:03:11,875 --> 00:03:14,416
{\an8}ஆனா அதனால பக்கவிளைவுகள்
வர அதிக வாய்ப்பு இருக்கு.

27
00:03:14,958 --> 00:03:18,250
{\an8}மாத்திரையை விடாம சாப்பிட அலாரம்
வச்சுக்கோ,இல்லன்னா அது வேலை செய்யாது.

28
00:03:19,333 --> 00:03:20,500
{\an8}உன்னால அத சரியா பண்ண முடியுமா?

29
00:03:23,708 --> 00:03:25,375
ரய். ரய்.

30
00:03:29,541 --> 00:03:31,540
செல்லம், இதால நீ
மோசமா உணருறன்னு புரியுது.

31
00:03:31,541 --> 00:03:34,416
{\an8}திருத்தம், அது என்னை எதையுமே
உணர விடுறது இல்ல.

32
00:03:34,916 --> 00:03:36,874
சரி லீனா, அவ போக விரும்புற
இடத்துக்கு கூட்டிட்டு போக

33
00:03:36,875 --> 00:03:38,915
- ஒரு டிரைவரை ஏற்பாடு பண்ணிடு.
- கண்டிப்பா.

34
00:03:38,916 --> 00:03:41,624
அப்புறம், ஹோட்டல்ல இருந்து ரெண்டு தெரு
தள்ளி ஒரு பார்மசி இருக்கு,

35
00:03:41,625 --> 00:03:43,540
அங்க அவளுக்கு தேவையான
மருந்துகளை வாங்கலாம்.

36
00:03:43,541 --> 00:03:46,915
{\an8}அது தவிர, அவளோட வலிப்பு நோய்க்கு வழக்கமா
கவனிச்சுக்க வேண்டிய விஷயங்கள் தான்,

37
00:03:46,916 --> 00:03:50,957
{\an8}அதாவது மின்னுற விளக்குகள், நல்ல தூக்கம்,
மன அழுத்தம் கூடாது, மது அருந்தக் கூடாது.

38
00:03:50,958 --> 00:03:53,541
சூப்பர். நானும் கன்னியாஸ்திரிகளும்
இந்த கோடையை ஜாலியா கொண்டாடுவோம்.

39
00:03:54,708 --> 00:03:59,499
ஆக, முதல் நாலு நாள் லொகேஷன் மேனேஜர்
மற்றும் லாயர்ஸ்கூட ரொம்ப பிஸியா இருக்கும்.

40
00:03:59,500 --> 00:04:03,333
{\an8}- நான் கொஞ்சம் லீவு எடுக்கப் பாத்தேன், ஆனா…
- அப்போ நாம ஒன்னா நேரம் செலவிட முடியாதா?

41
00:04:05,541 --> 00:04:07,832
அம்மா, நீங்க வளர்ந்த இடத்தை
எனக்கு காட்றதா வாக்கு கொடுத்தீங்க.

42
00:04:07,833 --> 00:04:10,874
இல்ல, செல்லம், நாம கண்டிப்பா
ஒன்னா நிறைய நேரம் செலவிடுவோம்.

43
00:04:10,875 --> 00:04:12,457
நமக்கு முழுசா ஆறு வாரம் இருக்கு.

44
00:04:12,458 --> 00:04:14,250
நாம நல்லா ஜாலியா இருப்போம்.
இது மயோர்கா.

45
00:04:14,750 --> 00:04:16,583
நீ குடுத்த வாக்கை காப்பாத்துற
வரைக்கும் சரி.

46
00:04:17,500 --> 00:04:19,958
{\an8}அன்னா டாட் எழுதிய நாவலை
அடிப்படையாகக் கொண்டது

47
00:04:28,958 --> 00:04:29,791
நன்றி.

48
00:04:30,666 --> 00:04:33,291
அந்த பட்டியலை திரும்ப ஒரு தடவை பாப்போம்.
ஆமா.

49
00:05:14,875 --> 00:05:16,541
- ஹலோ.
- வரவேற்கிறோம்.

50
00:05:18,125 --> 00:05:21,166
- உங்களுக்காக காத்திருந்தோம், மிஸ் பெரா.
- இசோல்டெனு கூப்பிடு.

51
00:05:21,666 --> 00:05:22,500
வரவேற்கிறோம்.

52
00:05:23,708 --> 00:05:26,500
நன்றி.
இவ என் பொண்ணு, ஒரையா. செல்லம்?

53
00:05:28,125 --> 00:05:29,874
- ஹாய்.
- பயணம் செஞ்சதுல களைப்பா இருக்கா.

54
00:05:29,875 --> 00:05:32,249
- ஹாய்.
- நீ போய் ஓய்வெடு, நாம ரூம்ல சந்திக்கலாம்.

55
00:05:32,250 --> 00:05:33,874
ஒரு முக்கியமான கான்பரன்ஸ் கால் இருக்கு.

56
00:05:33,875 --> 00:05:36,458
எங்க கான்சியர்ஜ் டீம் உங்களைச்
சந்திக்க ஆவலா இருக்காங்க.

57
00:05:40,166 --> 00:05:42,540
ஹலோ, எங்க ஹோட்டலுக்கு உங்களை வரவேற்கிறோம்.

58
00:05:42,541 --> 00:05:44,250
- ஹாய்.
- உங்களோட பயணம் எப்படி இருந்தது?

59
00:05:44,750 --> 00:05:45,958
- நல்லா இருந்தது.
- நல்லது.

60
00:05:46,625 --> 00:05:48,708
மன்னிச்சிடுங்க, உங்ககிட்ட சின்னதா ஒரு…

61
00:05:50,375 --> 00:05:52,916
நான் இதை டிக்டாக்ல பாத்தேன்.
இத செய்ய எனக்கு 20 நிமிஷம் ஆச்சு.

62
00:05:53,416 --> 00:05:57,166
சொல்லுங்க, அடுத்த கண்ணுக்கும்
இவ்ளோ நேரம் செலவு பண்றதுக்கு இது ஒர்த்தா?

63
00:05:58,750 --> 00:06:00,625
கம்பெனி நேரம்ன்றதால, நான்
ஆமான்னுதான் சொல்வேன்.

64
00:06:02,875 --> 00:06:04,332
உங்களை பிடிச்சிருக்கு. என் கூட வாங்க.

65
00:06:04,333 --> 00:06:06,290
சரி, உங்க அறைக்கு கூட்டி போறேன்.
இந்த பக்கம்.

66
00:06:06,291 --> 00:06:08,041
- சரி, என் பேரு அமாரா.
- என் பேரு ரய்.

67
00:06:08,541 --> 00:06:10,000
சரி. இதுதான் லாபி.

68
00:06:10,500 --> 00:06:12,415
எப்ப உதவி வேணும்னாலும்
என்னை இங்க பாக்கலாம்.

69
00:06:12,416 --> 00:06:15,000
சரி, எங்க ஸ்பானிஷ் சொர்க்கத்துக்கு
நீங்க எதுக்காக வந்திருக்கீங்க?

70
00:06:15,500 --> 00:06:17,333
என் அம்மா ஒரு ரியல் எஸ்டேட்
டீலை முடிக்க வந்திருக்காங்க.

71
00:06:18,166 --> 00:06:20,375
ஆமா, அவங்க கம்பெனி ஒரு புது
ஹோட்டலை கட்ட நினைக்கிறாங்க.

72
00:06:20,916 --> 00:06:24,208
இன்னொரு ஹோட்டலா, ஆச்சரியமா இருக்கு.
இங்க இருக்குறவங்களுக்கு இது பிடிக்கும்.

73
00:06:24,708 --> 00:06:27,666
- உங்களுக்கு இந்த தீவை பத்தி தெரியுமா?
- இல்ல இல்ல, இதுதான் என் முதல் முறை.

74
00:06:28,500 --> 00:06:30,374
நான் டெக்சாஸை விட்டு வெளில போனதே இல்ல.

75
00:06:30,375 --> 00:06:33,165
வாவ், டெக்சாஸ்காரியா. செம.

76
00:06:33,166 --> 00:06:36,125
சரி, ரய், உனக்கு ஜாலியா இருக்க
என்ன பண்ணப் பிடிக்கும்?

77
00:06:37,333 --> 00:06:40,125
தெரியல. ஒருவேளை பீச்சுக்குப் போகலாம்
இல்ல பூல் பக்கம் படுத்துக்கலாம்.

78
00:06:40,666 --> 00:06:43,625
நீ தாராளமா அதைச் செய்யலாம், ஆனா
இங்க இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு.

79
00:06:44,166 --> 00:06:46,290
- உனக்குக் குகைகள் பிடிக்குமா?
- குகைகளா?

80
00:06:46,291 --> 00:06:47,207
நீ சிங்கிளா?

81
00:06:47,208 --> 00:06:49,750
- ஆமா.
- இங்க ஆளுங்க செம கவர்ச்சியா இருப்பாங்க.

82
00:06:50,250 --> 00:06:52,999
அவங்க கார்தீஜினியன்ஸ், ரோமன்ஸ், பிரான்ஸ்,
ஸ்பெயின்ல இருந்து வந்த

83
00:06:53,000 --> 00:06:55,165
கேட்டலான் மக்கள்னு
ஒரு சூப்பர் மிக்ஸா இருப்பாங்க.

84
00:06:55,166 --> 00:06:58,665
உனக்கு என்ன பிடிச்சாலும்,
இது ஒரு ஹூக்-அப் பஃபே மாதிரி.

85
00:06:58,666 --> 00:07:01,083
அப்புறம் மரத்துல
ஆடுகளைப் பாத்தா ஆச்சரியப்படாத.

86
00:07:01,791 --> 00:07:03,708
- மரத்துல ஆடுகளா?
- ஆமா, மரத்துல ஆடுகள்.

87
00:07:04,291 --> 00:07:07,707
எதுவா இருந்தாலும், இந்த கோடை காலம் உனக்கு
ஒரு மறக்க முடியாத அனுபவமா இருக்கும்.

88
00:07:07,708 --> 00:07:10,040
சரி, உங்க அம்மாவோட
ரூம் அந்த ஹால் தாண்டி இருக்கு,

89
00:07:10,041 --> 00:07:11,291
இது உன்னோடது.

90
00:07:18,000 --> 00:07:20,291
உங்க அம்மாவோட கம்பெனி
ஒரு செம இடத்தை உருவாக்கியிருக்கு.

91
00:07:22,208 --> 00:07:23,041
ஆமா.

92
00:07:27,791 --> 00:07:28,874
மன்னிக்கணும்.

93
00:07:28,875 --> 00:07:30,165
6:00
மருந்து சாப்பிடு

94
00:07:30,166 --> 00:07:31,415
நீ ஓய்வெடு, நான் கிளம்புறேன்.

95
00:07:31,416 --> 00:07:34,040
உனக்கு எது வேணும்னாலும்
கீழ ஃபோன் பண்ணிக் கேளு.

96
00:07:34,041 --> 00:07:35,291
ஆஃப் வீடர்செஹன். பை-பை.

97
00:07:36,250 --> 00:07:37,125
நன்றி, அமாரா.

98
00:08:02,333 --> 00:08:04,374
சரி, நாளைக்கு என்ன பிளான்?

99
00:08:04,375 --> 00:08:08,125
எனக்கு தொடர்ச்சியா நிறைய மீட்டிங் இருக்கு,
அப்புறம் பார்ட்டி பிளான் வேலை இருக்கு.

100
00:08:09,416 --> 00:08:10,250
என்ன பார்ட்டி?

101
00:08:11,166 --> 00:08:12,000
நிதி திரட்டும் நிகழ்ச்சி.

102
00:08:12,500 --> 00:08:16,124
ஆமா. அவங்க எங்களை ஹோட்டல் கட்ட
விடுறதுக்காக மட்டும் இல்லாம, நல்லெண்ணத்துல

103
00:08:16,125 --> 00:08:18,832
மயோர்கா குழந்தைகளுக்காக
ஒரு கலை மையத்தையும் நாங்க கட்டுறோம்.

104
00:08:18,833 --> 00:08:20,041
சரி, அது நல்ல விஷயம்தான்.

105
00:08:25,000 --> 00:08:26,166
ஒண்ணும் பிரச்சனை இல்லயே?

106
00:08:26,666 --> 00:08:30,166
கம்பெனி பத்திதான். இந்த வருஷம் திரும்ப
வேலைக்கு வருவேனான்னு அவங்க கேக்குறாங்க.

107
00:08:31,541 --> 00:08:33,457
ஆனா நீ திரும்பப் போவ, இல்லையா?

108
00:08:33,458 --> 00:08:35,040
நீ இந்த கோடையில நல்லா ஓய்வெடுக்கணும்,

109
00:08:35,041 --> 00:08:36,833
அப்புறம் பழைய மாதிரி
வேலைக்குப் போயிடுவ.

110
00:08:38,708 --> 00:08:39,541
ஆமா.

111
00:08:42,041 --> 00:08:44,915
சீசன் முடியுறதை கொண்டாட
நாங்க இன்னைக்கு ராத்திரி வெளியே போறோம்.

112
00:08:44,916 --> 00:08:46,208
நீயும் இங்க இருந்திருக்கலாம்.

113
00:08:46,791 --> 00:08:49,125
நீ எப்படி இருக்க?
அந்தப் புது மருந்து வேலை செய்யுதா?

114
00:08:49,708 --> 00:08:51,958
அதுக்கு… என்னை பழக்கப்படுத்திக்க
கொஞ்சம் நேரம் ஆகும்.

115
00:08:52,625 --> 00:08:54,666
நாங்க எல்லாரும் உன்னை நினைச்சு
ரொம்ப கவலைப்பட்டோம்.

116
00:08:55,291 --> 00:08:56,708
முதல்ல, அப்படிப் பண்ணாதீங்க.

117
00:08:57,750 --> 00:08:59,250
ரெண்டாவது, நான்
நல்லாத்தான் இருக்கேன்.

118
00:09:00,166 --> 00:09:02,583
என் அம்மா நாளைக்கு
ஒரு பிளான் வச்சிருக்காங்க,

119
00:09:03,083 --> 00:09:06,790
- அவங்க வளர்ந்த இடத்தை காட்டப் போறாங்க.
- உங்க அம்மா ஒரு ராணி மாதிரி.

120
00:09:06,791 --> 00:09:09,875
நான் சொன்னதை விடு. நாங்க எல்லாரும்
உங்க கூட இருந்திருக்கலாம்னு ஆசையா இருக்கு.

121
00:09:10,375 --> 00:09:12,332
சரி, ஹாட்டான ஸ்பானிஷ்
ஆளுங்களை பாத்தா சொல்லு.

122
00:09:12,333 --> 00:09:13,457
- சரியா?
- சரி.

123
00:09:13,458 --> 00:09:15,541
- கண்டிப்பா.
- நாங்க உன்னை நேசிக்கிறோம். ஃபோன் பண்ணு.

124
00:09:16,041 --> 00:09:17,790
லவ் யூ, ரய்!

125
00:09:17,791 --> 00:09:19,208
லவ் யூ. பை.

126
00:09:23,875 --> 00:09:25,333
11:00
மருந்து சாப்பிடு

127
00:10:13,833 --> 00:10:16,832
சரி, அப்போ நமக்கு
ஒரு 150 விருந்தினர்கள் வர்றாங்க.

128
00:10:16,833 --> 00:10:18,082
இது அழகா இருக்கு.

129
00:10:18,083 --> 00:10:21,833
ஹே, ரய், உனக்கு எக்ஷெல் பிடிக்குமா
இல்ல ஓட்மீல் பிடிக்குமா?

130
00:10:22,750 --> 00:10:25,040
ஏன் எல்லாத்துக்கும்
சாப்பாட்டு பேரை வைக்கிறாங்க?

131
00:10:25,041 --> 00:10:25,958
எனக்குத் தெரியல.

132
00:10:28,083 --> 00:10:30,958
செல்லம், நீ ஏன் ஜாலியா ஏதாவது
பண்ணக்கூடாது, நாம அப்புறமா சந்திக்கலாமே?

133
00:10:32,500 --> 00:10:34,915
- பீச்சுக்குப் போகலாம்னு இருந்தேன்.
- அது நல்ல யோசனைதான்.

134
00:10:34,916 --> 00:10:35,750
டிரைவரை கூட்டுப் போ.

135
00:10:36,416 --> 00:10:38,082
அதிகப்படியான மருந்துகளை எடுத்துக்கோ.

136
00:10:38,083 --> 00:10:40,291
தண்ணி. கொஞ்சம் சன்பிளாக்
போட்டுக்கோ, செல்லம்.

137
00:10:40,791 --> 00:10:42,250
- அப்புறம் ரய்…
- கவனமா இருக்கணுமா?

138
00:10:43,625 --> 00:10:44,458
ஜாலியா இரு.

139
00:10:47,000 --> 00:10:48,208
கோக்கனட் கிரீம் தான் பெஸ்ட்.

140
00:10:50,041 --> 00:10:52,208
பாத்தியா? அக்கறையே இல்லாத
மாதிரி இருக்கா, ஆனா இருக்கு.

141
00:10:57,708 --> 00:10:59,500
- ஹாய்.
- ஹாய்.

142
00:11:00,500 --> 00:11:01,500
அமைதியான காலையா இருந்ததா?

143
00:11:02,708 --> 00:11:04,416
- ஏன்?
- உன் கண்கள்.

144
00:11:05,458 --> 00:11:07,249
- எனக்கு இந்த ஐலைனர் பிடிச்சிருக்கு.
- நன்றி.

145
00:11:07,250 --> 00:11:09,082
சரி, எங்க போகணும்?

146
00:11:09,083 --> 00:11:12,416
ஆமா, ஏதாவது பீச்சை சிபாரிசு பண்ண
முடியுமான்னு கேக்கலாம்னு இருந்தேன்.

147
00:11:13,291 --> 00:11:15,041
எனக்கு ஒரு செம இடம்
தெரியும்னு நினைக்குறேன்.

148
00:11:15,666 --> 00:11:17,166
அது ரொம்ப விசேஷமான ஒரு இடம்.

149
00:11:17,791 --> 00:11:19,125
- நன்றி.
- என்ஜாய் பண்ணு.

150
00:11:20,416 --> 00:11:21,250
சூப்பர்.

151
00:11:51,458 --> 00:11:53,333
{\an8}ஐ ஹார்ட்
மயோர்கா

152
00:14:56,208 --> 00:14:57,208
நான் உனக்கு உதவட்டுமா?

153
00:15:01,125 --> 00:15:02,291
இல்ல, இல்ல.

154
00:15:03,500 --> 00:15:05,250
- முறைக்குறது தப்பு, செனோரிட்டா.
- நான்…

155
00:15:06,083 --> 00:15:07,625
நான் முறைச்சுப் பாக்கல. நான்…

156
00:15:08,916 --> 00:15:10,166
உனக்கு பின்னாடி பாத்துட்டு இருந்தேன்.

157
00:15:12,458 --> 00:15:14,166
வாவ். செம சீன்.

158
00:15:17,458 --> 00:15:20,082
- சரி, நான் கிளம்புறேன்.
- ஆமா, நீ கிளம்பணும் தான்.

159
00:15:20,083 --> 00:15:22,916
- என்னது?
- நீ கிளம்பணும்னு சொன்னேன்.

160
00:15:23,833 --> 00:15:26,500
- தப்பு பண்ணிட்டேனா? உனக்கு என்ன பிரச்சனை?
- பிரச்சனை இருக்கு தான்.

161
00:15:27,375 --> 00:15:29,583
இது ஊர் மக்கள் வர்ற பீச்.

162
00:15:30,166 --> 00:15:33,207
நாங்க வெயில்ல படுத்திருக்கும்போது டூரிஸ்ட்
முறைச்சு பாக்குறது பிடிக்காது.

163
00:15:33,208 --> 00:15:35,874
சாரி. இது ஊர் மக்களுக்கு மட்டும்
உரிமையான பீச்னு எனக்கு தெரியாது.

164
00:15:35,875 --> 00:15:37,165
நான் நீந்தணும்னு நினைச்சேன்.

165
00:15:37,166 --> 00:15:41,500
உனக்கு மேர்ஸ் & மார் ஹோட்டல்ல இருக்குற
பூல் வசதியா இருக்கும்னு நினைக்கிறேன்.

166
00:15:42,000 --> 00:15:43,000
உனக்கு எப்படி…

167
00:15:52,166 --> 00:15:54,583
ஏன்? நான் உன் கவனத்தை திசை திருப்புறேனா?

168
00:15:56,875 --> 00:15:57,875
இல்ல.

169
00:15:59,500 --> 00:16:00,541
நான் கிளம்புறேன்.

170
00:16:44,625 --> 00:16:47,000
ஹாய். ஹலோ. உங்ககிட்ட…

171
00:16:48,041 --> 00:16:48,875
சரி.

172
00:16:56,541 --> 00:16:57,791
ஹலோ. இங்க பாருங்க.

173
00:16:58,625 --> 00:16:59,791
நீங்க ஆங்கிலம் பேசுவீங்களா?

174
00:17:01,250 --> 00:17:03,708
என்கிட்ட தேர்ந்தெடுக்க
நிறைய ஓவியங்கள் இருக்கு.

175
00:17:04,458 --> 00:17:06,375
எனக்கு… உங்ககிட்ட சார்ஜர் இருக்கா?

176
00:17:08,083 --> 00:17:09,875
ஒருவேளை வலது பக்கமா? இல்ல மேட்டுலையா?

177
00:17:10,875 --> 00:17:11,790
எனக்கு உங்க…

178
00:17:11,791 --> 00:17:12,666
மன்னிச்சிடுங்க.

179
00:17:13,250 --> 00:17:15,750
சரி, மன்னிச்சிடுங்க.
நல்ல நாளா அமையட்டும். நன்றி.

180
00:17:19,375 --> 00:17:20,999
- அடக் கடவுளே.
- அடப்பாவி.

181
00:17:21,000 --> 00:17:21,833
ரொம்ப சாரி.

182
00:17:23,750 --> 00:17:24,583
ரொம்ப சாரி.

183
00:17:28,208 --> 00:17:29,208
கேளு, செனோரிட்டா.

184
00:17:29,916 --> 00:17:32,582
நீ பாக்கலாம் ஆனா தொடக் கூடாது.

185
00:17:32,583 --> 00:17:33,957
நான் உன் மேல புகாரளிக்கவா?

186
00:17:33,958 --> 00:17:36,041
அறிவில்லாம பேசாத. நான்
வீட்டுக்கு போயிட்டு இருக்கேன்.

187
00:17:37,375 --> 00:17:39,041
அதனால, ப்ளீஸ் வழி விடு.

188
00:17:49,333 --> 00:17:50,500
அது அந்த பக்கம் கிடையாது.

189
00:17:52,666 --> 00:17:53,833
இந்த பக்கமும் கிடையாது.

190
00:17:55,625 --> 00:17:57,583
வழி தவறிட்டியா, மிஸ் அமெரிக்கா?

191
00:17:58,083 --> 00:17:58,916
இல்ல, நான் வழி தவறல.

192
00:18:00,208 --> 00:18:02,416
இந்த அழகான வளைவான தெருக்களை
ரசிச்சுட்டு இருக்கேன்.

193
00:18:03,833 --> 00:18:04,791
நீ இதை மறுக்கலாம்,

194
00:18:05,541 --> 00:18:07,958
இல்லன்னா ஒத்துக்கிட்டு
என்கிட்ட உதவி கேட்கலாம்.

195
00:18:08,708 --> 00:18:09,541
எனக்கு ஒண்ணுமில்ல.

196
00:18:10,791 --> 00:18:11,791
நல்லாத்தான் இருக்கேன், நன்றி.

197
00:18:12,625 --> 00:18:14,749
அப்புறம், நீ என்ன பண்ற?
என்னை பின்தொடர்றியா?

198
00:18:14,750 --> 00:18:18,958
ஆமா. பீச்ல என்னை அப்படி முறைச்சுப் பாத்து
என் மனசுல இடம் பிடிச்சுட்ட,

199
00:18:19,541 --> 00:18:21,290
அதான் உன்னை விட்டுப் போக முடியல.

200
00:18:21,291 --> 00:18:23,416
- நீ எப்பவுமே இப்படி விசித்திரமானவனா?
- விசித்திரமானவனா?

201
00:18:24,000 --> 00:18:25,707
நிஜமாவே நான் உன்னை
நினைச்சுக் கவலைப்பட்டேன்,

202
00:18:25,708 --> 00:18:27,915
ஆனா எனக்கு நிறைய வேலை இருக்கு,

203
00:18:27,916 --> 00:18:31,500
அதனால உனக்கு உதவ நான் கொடுத்த
வாய்ப்பு இன்னும் பத்து நொடில முடிஞ்சிடும்.

204
00:18:40,791 --> 00:18:41,625
சரி.

205
00:18:44,458 --> 00:18:45,375
சரி.

206
00:18:50,375 --> 00:18:52,625
மேர்ஸ் & மார் ஹோட்டலுக்குப் போற வழி.

207
00:18:53,250 --> 00:18:54,083
நீயே பிடிச்சுக்கோ,

208
00:18:54,666 --> 00:18:57,416
அப்போதான் நான் உன்னை கொலை
பண்ண மாட்டேன்னு உனக்குத் தெரியும்.

209
00:19:04,166 --> 00:19:06,166
- அந்தப் பக்கம்.
- அது அந்தப் பக்கம்தான்.

210
00:19:11,750 --> 00:19:13,333
அழகான ஆண்கள்தான்
பெண்களைக் கொலை பண்ணுவாங்க.

211
00:19:14,416 --> 00:19:17,500
ஆனா அவங்க ரொம்ப வசீகரமா இருப்பாங்க,
அதனால நீ அப்படி கிடையாது.

212
00:19:18,791 --> 00:19:20,375
அப்போ நான் அழகா
இருக்கேன்னு நினைக்கிறியா?

213
00:19:25,708 --> 00:19:27,541
அப்புறம் நான் முன்னாடி
உன்னை முறைச்சு பாக்கல.

214
00:19:28,416 --> 00:19:29,458
நான் ஆராய்ஞ்சுட்டு இருந்தேன்.

215
00:19:30,250 --> 00:19:32,208
- எல்லாரையும் தான்.
- ஆமா.

216
00:19:32,916 --> 00:19:35,250
மயோர்காவோட இந்த வெள்ளை மணல் பீச்ல

217
00:19:35,791 --> 00:19:38,415
ஒரு புது வகை நிர்வாண
மனிதனைப் பாக்குறேன்.

218
00:19:38,416 --> 00:19:41,291
- டெக்சாஸ்ல நிர்வாண பீச் எதுவும் இல்ல.
- நிஜமாவா?

219
00:19:42,541 --> 00:19:46,541
அப்போ மனித உடலமைப்பைப் பத்தி நீ இன்று
புதுசா ஏதாவது கத்துருப்பன்னு நம்புறேன்.

220
00:20:06,416 --> 00:20:07,250
உனக்கு கொஞ்சம் வேணுமா?

221
00:20:08,000 --> 00:20:10,833
- இல்ல, எனக்கு வேணாம்.
- அட. நீ எச்சில் ஊறுறதைப் பாத்தேன்.

222
00:20:11,750 --> 00:20:13,041
பிடிவாதம் பிடிக்காத.

223
00:20:13,625 --> 00:20:14,750
நான் பிடிவாதம் பிடிக்கல.

224
00:20:16,666 --> 00:20:17,500
சாப்பிட்டுப் பாரு.

225
00:20:25,291 --> 00:20:27,333
இதை நாங்க என்சைமாடான்னு சொல்லுவோம்.

226
00:20:28,083 --> 00:20:30,250
இது ஒரு குரோசண்ட் மாதிரி தான்.

227
00:20:30,750 --> 00:20:32,165
- அத விட சூப்பர்.
- ரொம்பவே சூப்பர்.

228
00:20:32,166 --> 00:20:34,125
எனக்கு எவ்வளவு பசிச்சதுன்னே
எனக்கு தெரியல. நன்றி.

229
00:20:35,041 --> 00:20:37,666
உனக்கு வேணும்னா,
நாம ஏதாவது சாப்பிடப் போலாமா.

230
00:20:38,791 --> 00:20:39,916
நீ என்னை வெளிய போக கூப்பிடுறியா?

231
00:20:42,875 --> 00:20:44,124
இல்ல.

232
00:20:44,125 --> 00:20:45,833
உன் ஹோட்டல்ல தான் ரூம் சர்வீஸ் இருக்கே.

233
00:20:52,083 --> 00:20:54,583
உன் ஹோட்டல்ல புல்லுல
நீ ஜாலியா இருப்பன்னு நம்புறேன்.

234
00:20:55,166 --> 00:20:57,375
உனக்கு அந்தப் புல்லு மேலயும்
ஒரு பிரச்சனையா?

235
00:20:58,333 --> 00:20:59,166
சொல்லப்போனா, ஆமா.

236
00:21:00,625 --> 00:21:03,500
இந்தப் புல்லைப் பச்சையா வச்சுக்கப்
பயன்படுத்துற கெமிக்கல்ஸ்,

237
00:21:04,125 --> 00:21:06,583
நாங்க மீன் பிடிக்குற தண்ணியில
கலக்குதுன்னு தெரியுமா?

238
00:21:07,166 --> 00:21:09,583
ஆனா டூரிஸ்ட்டுக்கு எல்லாம் சரியா
இருந்தா போதும்,

239
00:21:11,125 --> 00:21:12,125
மத்ததைப் பத்தி யாருக்கு
என்ன கவலை?

240
00:21:12,708 --> 00:21:15,625
டூரிஸ்ட் இந்தத் தீவுக்கு நடந்த
தப்பான விஷயம் மாதிரி பேசுற.

241
00:21:16,166 --> 00:21:19,499
இந்த "ஐ லவ் மயோர்கா" டீ-ஷர்ட் அப்புறம்
கீ-செயின் எல்லாம் யாரு வாங்குறாங்க?

242
00:21:19,500 --> 00:21:22,291
மயோர்கா மக்களுக்கு எது நல்லதுன்னு
உனக்கு தெரிஞ்சதுல ரொம்ப சந்தோஷம்.

243
00:21:22,958 --> 00:21:24,208
நீ இங்க வந்து எவ்ளோ நாள் ஆகுது?

244
00:21:28,416 --> 00:21:30,665
ஒரு நாள். ஆனா எங்க அம்மா
இந்த ஊர்க்காரி தான்.

245
00:21:30,666 --> 00:21:31,500
அப்படியா?

246
00:21:32,583 --> 00:21:35,416
சரி, அப்போ உன்னோட அறிவைப் பத்தி
சந்தேகப்பட்டதுக்கு என்னை மன்னிச்சுடு.

247
00:21:44,791 --> 00:21:45,791
பை.

248
00:22:01,541 --> 00:22:02,416
ஹே.

249
00:22:03,416 --> 00:22:04,958
நீ ரொம்ப சீக்கிரம் மனசை மாத்திட்ட.

250
00:22:05,666 --> 00:22:07,583
ரெண்டு நிமிஷம் கூட என்னை விட்டு
தள்ளி இருக்க முடியலையா?

251
00:22:08,125 --> 00:22:10,416
இல்ல, ப்ளீஸ் என் ஃபோனைத்
திரும்பக் குடுத்தா போதும்.

252
00:22:12,666 --> 00:22:13,625
சரி. இந்தா.

253
00:22:21,833 --> 00:22:23,625
நீ மொழியையாவது கத்துக்குறியே.

254
00:22:26,375 --> 00:22:28,332
செல்லம், எங்க போன? நீ நல்லா இருக்கியா?

255
00:22:28,333 --> 00:22:31,207
நல்லா இருக்கேன். சாரி, பீச்சுக்கு
போனேன், என் போன் ஆஃப் ஆயிடுச்சு.

256
00:22:31,208 --> 00:22:32,165
போன் ஆஃப் ஆயிடுச்சா?

257
00:22:32,166 --> 00:22:34,332
- செல்லம், நீ போனை சார்ஜ்ல வச்சுக்கணும்.
- ஆமா.

258
00:22:34,333 --> 00:22:35,916
நீ மாத்திரை சாப்பிட மறந்துட்டியா?

259
00:22:37,750 --> 00:22:40,708
அம்மா, கூடுதல் மருந்து எடுத்துட்டு போனேன்.
பிரச்சனை இல்ல.

260
00:22:41,875 --> 00:22:42,833
சரி, சாரி.

261
00:22:43,333 --> 00:22:44,416
நான் கவலைப்படுவேன்னு
உனக்கே தெரியும்.

262
00:22:45,250 --> 00:22:47,707
உன்னைப் பாரு. நீ பாக்க ரொம்ப அழகா இருக்க.
கொஞ்சம் நிறம் கூட மாறியிருக்கு.

263
00:22:47,708 --> 00:22:49,500
உன் கண்ணுல ஒரு சின்னப் பிரகாசம் தெரியுது.

264
00:22:51,083 --> 00:22:52,583
எல்லாத்தையும் சொல்லு. என்ன பண்ண?

265
00:22:53,958 --> 00:22:54,833
ரிலாக்ஸா இருந்தது.

266
00:22:55,583 --> 00:22:57,915
"ரிலாக்ஸா இருந்ததா"? அவ்வளவுதானா?
ரிலாக்ஸா இருந்தியா?

267
00:22:57,916 --> 00:22:59,250
ரிலாக்ஸா இருந்தது, அம்மா.

268
00:22:59,750 --> 00:23:02,124
உண்மையாவே, மருந்துகளால களைப்பா இருக்கேன்,
எனக்கு தூங்கணும் போல இருக்கு.

269
00:23:02,125 --> 00:23:03,750
இந்த டோசேஜ் என்னைப் போட்டுப் படுத்துது.

270
00:23:05,333 --> 00:23:07,750
ஆமா, சரி.
சரி. நாம நாளைக்குப் பேசலாம்.

271
00:23:08,500 --> 00:23:09,333
ஆனா, ஹே,

272
00:23:10,083 --> 00:23:11,915
நீ இங்க இருக்குறது எனக்கு ரொம்ப சந்தோஷம்.

273
00:23:11,916 --> 00:23:13,208
இன்னும் இங்கேயேன்னு சொல்றீங்களா?

274
00:23:14,000 --> 00:23:16,624
இது சிரிக்குற விஷயம் இல்ல.
இந்த மாதிரி கிண்டலை எப்பவுமே பண்ணாத.

275
00:23:16,625 --> 00:23:18,291
சரி, சாரி.

276
00:23:18,875 --> 00:23:21,000
நாம நாளைக்குப் பேசலாம்.
லவ் யூ. நல்லா ஓய்வெடு.

277
00:23:21,583 --> 00:23:23,666
- நானும் உங்களை நேசிக்கிறேன். குட் நைட்.
- குட் நைட்.

278
00:23:51,000 --> 00:23:52,915
ரய். பீச் எப்படி இருந்தது?

279
00:23:52,916 --> 00:23:54,499
நீ முக்கியமான விஷயத்தை விட்டுட்ட.

280
00:23:54,500 --> 00:23:56,957
- எத விட்டேன்? ஒரு நிமிஷம்.
- எல்லாரும் நிர்வாணமா இருந்தாங்க.

281
00:23:56,958 --> 00:23:59,916
ஆமா, அதுதான் அங்க விசேஷமே.
நீ அங்க என்ஜாய் பண்ணியா?

282
00:24:00,500 --> 00:24:03,666
- பீச்சும் கடலும் ரொம்ப அழகா இருந்தது.
- அப்போ அங்க இருந்த ஆண்கள்?

283
00:24:05,750 --> 00:24:06,583
எனக்குத் தெரியல.

284
00:24:07,750 --> 00:24:09,875
- அங்க ஒருத்தன் இருந்தான், ஹூலியன்.
- ஆமா.

285
00:24:10,583 --> 00:24:12,207
அவன் ஒரு பெரிய முட்டாள்.

286
00:24:12,208 --> 00:24:15,207
- சாரி, அவன்கிட்ட ஒரு பெரிய…
- இல்ல இல்ல, கேட்டுடுச்சு. ஆமா. அவன்…

287
00:24:15,208 --> 00:24:17,291
எனக்குத் தெரியல. நான் பாக்கல.

288
00:24:17,916 --> 00:24:19,291
- கண்டிப்பா.
- அவன் ரொம்ப முரடன்.

289
00:24:19,875 --> 00:24:21,166
- ஏன், அவன் என்ன பண்ணான்?
- அவன்…

290
00:24:21,916 --> 00:24:24,708
என் ஃபோன் ஆஃப் ஆனதால என்னைக் கூட்டிட்டு
வந்து ஹோட்டல்ல விட்டான், அப்புறம் அவன்…

291
00:24:26,000 --> 00:24:27,207
எனக்கு சாப்பாடும் வாங்கி தந்தான்.

292
00:24:27,208 --> 00:24:29,166
ஆமா, இவனைப் பாத்தா
ஒரு அயோக்கியன் மாதிரித் தெரியுதே.

293
00:24:29,750 --> 00:24:32,457
- நீ அங்க இருந்திருக்கணும், சத்தியமா.
- கிண்டல் பண்றேன்.

294
00:24:32,458 --> 00:24:35,707
எனக்கு ஹூலியனைத் தெரியும், அவன் சில
நேரங்கள்ல ஒரு மாதிரியாத்தான் இருப்பான்,

295
00:24:35,708 --> 00:24:38,249
ஆனா அவனுக்கும் இப்போ நிறையப்
பிரச்சனைகள் போயிட்டு இருக்கு.

296
00:24:38,250 --> 00:24:40,874
- இரு, உனக்கு அவனைத் தெரியுமா?
- இது ஒரு சின்னத் தீவு, செல்லம்.

297
00:24:40,875 --> 00:24:44,291
உன் முகத்தைப் பாத்தா, நீ அவனுக்கு இன்னொரு
வாய்ப்பு தர நினைக்கிற மாதிரித் தெரியுது.

298
00:24:45,125 --> 00:24:47,290
அவனும் நாங்க எல்லாரும் சேர்ந்து
இன்றிரவு கிளப்புக்கு போறோம்.

299
00:24:47,291 --> 00:24:49,415
- நீயும் வரணும்.
- கிளப்புக்கா?

300
00:24:49,416 --> 00:24:51,915
ஆமா. பெருசா, சத்தமா,
பாட்டு ஓடிட்டு இருக்கும்.

301
00:24:51,916 --> 00:24:54,583
ஆனா அங்க எல்லாரும்
துணி போட்டுருப்பாங்க, பெரும்பாலும்.

302
00:24:56,208 --> 00:25:00,041
- நான் அப்புறமா சொல்லட்டுமா?
- ஒண்ணும் பிரச்சனை இல்ல. அப்புறமா கூப்பிடு.

303
00:25:00,625 --> 00:25:03,541
ஜாலியா இருக்கும். ஆனா அங்க கவ்பாய்ஸ்
இருப்பாங்களானு சொல்ல முடியாது.

304
00:25:06,000 --> 00:25:06,915
சரி.

305
00:25:06,916 --> 00:25:09,541
- ஹலோ.
- எங்க ஹோட்டலுக்கு உங்களை வரவேற்கிறோம்.

306
00:25:10,541 --> 00:25:11,916
கடவுளே, இதுக்கு ஒரு முடிவே இல்லயா?

307
00:25:14,083 --> 00:25:15,000
சரி, இது ஜாலியா இருக்கு.

308
00:25:15,500 --> 00:25:17,083
நான் இன்னைக்கு பர்மிட்
வேலைகளை பாக்குறேன்.

309
00:25:18,375 --> 00:25:19,458
சரி, சொல்லு.

310
00:25:20,500 --> 00:25:21,708
உனக்கு இந்த இடம் பிடிச்சிருக்கா?

311
00:25:22,708 --> 00:25:23,541
இது அழகா இருக்கு.

312
00:25:24,250 --> 00:25:25,457
உங்க சின்ன வயசுல

313
00:25:25,458 --> 00:25:28,250
இந்தத் தீவு முழுக்க ஓடி விளையாடுனதை
கற்பனை பண்ணவே ஜாலியா இருக்கு.

314
00:25:29,416 --> 00:25:31,125
இங்க வளர்ந்தது ஒரு பிரமாதமான அனுபவம்.

315
00:25:32,250 --> 00:25:33,166
நீங்க ஏன் கிளம்புனீங்க?

316
00:25:34,125 --> 00:25:37,666
எங்க அம்மா போனதுக்கு அப்புறம்,
இது எனக்கு வீடாத் தோணல,

317
00:25:38,291 --> 00:25:39,415
சரியா?

318
00:25:39,416 --> 00:25:42,125
எனக்கு பெரிய கனவுகள் இருந்தது,
ஆனா நான் ஒரு சின்னத் தீவுல இருந்தேன்.

319
00:25:42,791 --> 00:25:46,249
எனக்கு, இது அவங்களோட வீடாத்தான் இருந்தது,
எனக்கான ஒன்னைத் தேடி வெளில போக நினைச்சேன்.

320
00:25:46,250 --> 00:25:47,625
அதுக்கு எவ்வளவு காலம் ஆச்சு?

321
00:25:48,375 --> 00:25:51,000
கிட்டத்தட்ட அஞ்சு வருஷம் ஒன்பது மாசம்.

322
00:25:52,208 --> 00:25:54,374
உங்க அழகான செல்லக் குழந்தை பிறந்த போதா?

323
00:25:54,375 --> 00:25:56,208
இல்ல, அது நான் உன்ன பெத்து எடுத்தப்போ.

324
00:25:58,500 --> 00:26:00,708
- நான் ரொம்ப ஜாலியானவள்.
- நீங்க ஜாலியானவங்கதான், அம்மா.

325
00:26:11,125 --> 00:26:12,708
{\an8}ஹூலியன்கார்சியா மற்றும்
பிறர் விரும்பியுள்ளனர்

326
00:26:24,958 --> 00:26:26,458
1:00
மருந்து சாப்பிடு

327
00:26:53,583 --> 00:26:56,583
அலாரம்ஸ் காலை 8:00 - மதியம் 1:00
மாலை 6:00 - இரவு 10:00

328
00:27:03,500 --> 00:27:06,207
{\an8}அமாரா
நான் இன்னைக்கு ராத்திரி உன் கூட வர்றேன்.

329
00:27:06,208 --> 00:27:09,082
{\an8}ஆனா போட்டுக்க என்கிட்ட துணி எதுவும் இல்ல.

330
00:27:09,083 --> 00:27:10,582
{\an8}வூப் வூப்!!

331
00:27:10,583 --> 00:27:13,416
{\an8}நானும் என் தோழி சோஃபியாவும்
உன் ரூமுக்கு வந்துட்டு இருக்கோம்.

332
00:27:23,000 --> 00:27:24,540
இது வேணுமா வேணாமா?

333
00:27:24,541 --> 00:27:25,957
இதோட பின் பக்கம் சூப்பரா இருக்கு.

334
00:27:25,958 --> 00:27:27,208
- ரய்.
- இல்ல.

335
00:27:27,875 --> 00:27:28,708
இல்ல, வேணா.

336
00:27:32,625 --> 00:27:34,249
இதை நான் முடிச்சுப் போட்டுப்பேன்.

337
00:27:34,250 --> 00:27:36,040
- இது நான் நினைச்சது இல்ல…
- சரி.

338
00:27:36,041 --> 00:27:37,291
- இது எப்படி இருக்கு?
- இது…

339
00:27:38,041 --> 00:27:40,124
- இது அழகா இருக்கு.
- உடனே வேணாம்னு சொல்லிடுவேன்.

340
00:27:40,125 --> 00:27:41,457
அப்போ இது… இது கெத்தா இருக்கு.

341
00:27:41,458 --> 00:27:42,958
இல்ல, எனக்கு இது பிடிக்கலை.

342
00:28:00,458 --> 00:28:01,707
ஆமா, ரய்!

343
00:28:01,708 --> 00:28:03,499
அடக் கடவுளே!

344
00:28:03,500 --> 00:28:04,750
இது நல்லாயிருக்கு.

345
00:28:05,333 --> 00:28:06,166
நல்லாயிருக்கு!

346
00:28:08,833 --> 00:28:10,666
ஆமா, பேபி! நல்லா இருக்கு.

347
00:28:13,291 --> 00:28:14,915
அம்மா
இன்னைக்கு ராத்திரி நான் இங்கேயே இருக்கேன்.

348
00:28:14,916 --> 00:28:16,375
மாத்திரைகளால அப்படியே தூங்கிட்டேன்.

349
00:28:25,000 --> 00:28:26,457
நான் மூணு ஆர்டர் பண்ணப் பாத்தேன்.

350
00:28:26,458 --> 00:28:27,707
- வாவ்!
- ஆமா, பொண்ணே!

351
00:28:27,708 --> 00:28:30,250
- நீ உன் ஸ்பானிஷ்ல கவனம் செலுத்தணும்.
- நாம ஷாட்ஸ் குடிக்கப் போறோம்!

352
00:28:32,416 --> 00:28:34,000
- சியர்ஸ்.
- சியர்ஸ்.

353
00:28:40,333 --> 00:28:41,790
- அடக் கடவுளே!
- ஹூலியன்!

354
00:28:41,791 --> 00:28:44,332
வந்து ஒரு ஷாட் குடி!
ரய் எல்லாருக்கும் ஆர்டர் பண்ணிட்டா.

355
00:28:44,333 --> 00:28:45,375
ஹலோ, பெண்களே.

356
00:28:46,291 --> 00:28:47,833
ஹலோ, தாராளமா செலவு பண்றவளே.

357
00:28:50,000 --> 00:28:51,166
எனக்கு இந்த பாட்டு பிடிக்கும்.

358
00:28:52,708 --> 00:28:54,083
- யார் ஆட விரும்புறீங்க?
- நான்!

359
00:28:54,916 --> 00:28:56,000
ரய்?

360
00:28:57,000 --> 00:29:00,291
- வா, செல்லம்.
- உன் திறமையை பாப்போம், மிஸ் அமெரிக்கா.

361
00:29:02,416 --> 00:29:03,416
போலாம், செல்லமே.

362
00:29:03,958 --> 00:29:05,415
நான் உன்னோட வர்றேன்.

363
00:29:05,416 --> 00:29:06,416
அவனை விடு!

364
00:30:15,291 --> 00:30:16,291
நிறுத்து!

365
00:30:17,875 --> 00:30:19,041
டேய், என்னை விடுடா

366
00:30:47,666 --> 00:30:48,833
ஹே.

367
00:30:51,500 --> 00:30:52,500
நான் பாத்துக்குறேன்.

368
00:31:02,250 --> 00:31:03,166
நீ நல்லாதானே இருக்க?

369
00:31:04,041 --> 00:31:04,999
- ஆமா.
- அப்படியா?

370
00:31:05,000 --> 00:31:06,291
நல்லாத்தான் இருக்கேன், நான்…

371
00:31:07,250 --> 00:31:08,707
என்னால டெக்கீலா குடிக்க முடியாது.

372
00:31:08,708 --> 00:31:11,458
- ட்ரிங்க்ல ஏதாவது இருந்திருக்கும்.
- இல்ல, இல்ல, எனக்கு ஒண்ணுமில்ல.

373
00:31:14,541 --> 00:31:16,166
சரி, நல்லது, ஏன்னா
நாம இப்போ கிளம்பணும்.

374
00:31:16,958 --> 00:31:18,375
- என்னது?
- இதை போட்டுக்கோ.

375
00:31:19,458 --> 00:31:21,583
- யாரையோ பாத்து தப்பிச்சு ஓடுறோமா?
- அப்புறமா சொல்றேன்.

376
00:31:22,250 --> 00:31:24,333
- நான் இதுக்கு முன்னாடி பைக்ல போனதே இல்ல.
- நிஜமாவா?

377
00:31:25,125 --> 00:31:26,375
கவலைப்படாத, உனக்கு இது பிடிக்கும்.

378
00:31:59,458 --> 00:32:00,291
நீ நல்லா இருக்கியா?

379
00:32:01,208 --> 00:32:02,041
நல்லா இருக்கேன்.

380
00:32:28,666 --> 00:32:30,041
உனக்கு ஒரு இடத்தை காட்ட நினைக்கிறேன்.

381
00:32:34,583 --> 00:32:35,708
நீ ஒரு மீனவனா?

382
00:32:37,208 --> 00:32:38,625
இது எங்க குடும்பத் தொழில்.

383
00:32:39,666 --> 00:32:42,416
நான் தண்ணியிலேயே வளர்ந்தவன்.
எனக்கு அது மட்டும்தான் தெரியும்.

384
00:32:44,500 --> 00:32:46,583
ஒரு நாள், அப்பாகிட்ட இருந்து
தொழிலை நான் பொறுப்பேற்பேன்.

385
00:32:47,875 --> 00:32:48,708
அநேகமா.

386
00:32:49,583 --> 00:32:50,707
அநேகமாவா?

387
00:32:50,708 --> 00:32:54,999
டூரிஸ்ட் வர்றதால எங்க தீவோட
மீன் பிடித் தொழில் ரொம்பப் பாதிச்சிருக்கு,

388
00:32:55,000 --> 00:32:58,458
அப்புறம் இந்த கம்பெனிகள் எல்லாம்
தீவுக்குப் பெரிய தீங்கு விளைவிக்குது.

389
00:32:59,541 --> 00:33:04,291
இன்னொரு பக்கம் பாத்தா,
அவங்களால தான் இது பிழைச்சுட்டும் இருக்கு.

390
00:33:05,750 --> 00:33:10,083
நான் ஏன் அந்த "ஐ ஹார்ட் மயோர்கா" ஷர்ட்
வாங்குறது இல்லன்னு இப்போ புரிஞ்சிருக்கும்.

391
00:33:12,208 --> 00:33:13,916
அதிக மக்கள் வந்தா
முன்னேற்றம் கூட நடக்கலாம்ல.

392
00:33:16,500 --> 00:33:20,875
குடும்பத் தொழிலை அழிக்கிறது
ஒண்ணும் முன்னேற்றம் மாதிரித் தெரியல.

393
00:33:25,291 --> 00:33:26,291
சரி, உன்னை பத்தி சொல்.

394
00:33:27,291 --> 00:33:30,125
டெக்சாஸ்ல உனக்காக என்ன காத்துட்டு இருக்கு?

395
00:33:32,875 --> 00:33:33,708
நான் ஒரு டான்ஸர்.

396
00:33:34,583 --> 00:33:35,416
கவர்ச்சியா?

397
00:33:37,875 --> 00:33:40,333
- நான் ஒரு கம்பெனியில இருக்கேன்.
- சரி. சரி.

398
00:33:41,291 --> 00:33:42,291
ஆனா…

399
00:33:43,041 --> 00:33:44,875
நான் திரும்பப் போவேனான்னு கூட தெரியல.

400
00:33:48,375 --> 00:33:52,708
அங்க என் வாழ்க்கை அப்படியே ஒரே இடத்துல
சுத்திட்டு இருக்க மாதிரி இருக்கு.

401
00:33:53,916 --> 00:33:56,250
டான்ஸ் ஒண்ணுதான்
என் வாழ்க்கைக்கே ஒரு அர்த்தத்தையும்

402
00:33:56,875 --> 00:33:58,041
சுதந்திரத்தையும் கொடுக்குது.

403
00:34:00,250 --> 00:34:02,583
- அப்புறம் ஏன் அத நிறுத்தணும்?
- ஏன்னா இப்போ அது என் கையில இல்ல.

404
00:34:04,000 --> 00:34:06,457
சாரி, என் பிரச்சனைகள் கேக்க
ரொம்பச் சின்னதா இருக்கலாம்.

405
00:34:06,458 --> 00:34:09,250
இல்ல, இல்ல, பரவால்ல. பணக்கார
பொண்ணுங்களுக்கும் கவலை இருக்கலாம்ல.

406
00:34:10,125 --> 00:34:12,666
- நாம இதை ஒரு டீ-ஷர்ட்ல போடணும்.
- ஆமா, கண்டிப்பா போடணும்.

407
00:34:13,250 --> 00:34:15,457
நீ என்ன பண்ற?

408
00:34:15,458 --> 00:34:18,125
வா. உனக்கு நீந்தத் தெரியலன்னா
நான் உதவறேன்.

409
00:34:18,708 --> 00:34:20,083
எனக்கு நீந்தத் தெரியும்.

410
00:34:38,291 --> 00:34:40,333
பாரு, எனக்கு நீந்தத் தெரியும்.

411
00:34:41,250 --> 00:34:44,333
நான் இந்தத் தடவை உன்னைத்
துணியைக் கழட்ட வைக்கணும்னு நினைச்சேன்.

412
00:34:49,166 --> 00:34:50,750
சரி, சமாதானம். சமாதானம்.

413
00:34:51,333 --> 00:34:52,541
- சரி.
- சமாதானம்.

414
00:34:53,083 --> 00:34:54,083
சமாதானம்.

415
00:34:55,750 --> 00:34:57,000
இது நல்லா இருக்கு.

416
00:34:57,708 --> 00:34:59,833
இந்த கோடையில சில புது விஷயங்களை
முயற்சிக்க நினைச்சேன்.

417
00:35:00,500 --> 00:35:02,916
இதுதான் என் வாழ்க்கையோட கடைசி
கோடை காலம்ன்ற மாதிரி வாழணும்.

418
00:35:03,833 --> 00:35:05,166
அது வாழ்றதுக்கு ஒரு நல்ல வழிதான்.

419
00:35:07,458 --> 00:35:08,916
சரி, உன் லிஸ்ட்ல அடுத்தது என்ன?

420
00:35:10,125 --> 00:35:12,916
பல்லு விளக்காம படுக்கப் போறதா?

421
00:35:13,666 --> 00:35:14,625
நிச்சயமா இல்ல.

422
00:35:15,791 --> 00:35:19,125
இல்ல காய் கறி சாப்பிடாம இருக்கிறதா?

423
00:35:19,666 --> 00:35:20,500
ஒருவேளை இருக்கலாம்.

424
00:35:22,125 --> 00:35:23,958
இல்ல ஒரு கவர்ச்சியான
அந்நியன் கூட நெருக்கமாகுறதா?

425
00:35:26,083 --> 00:35:27,458
நீ கவர்ச்சியானவன் மாதிரி நடிச்சுக்கிறேன்.

426
00:36:29,416 --> 00:36:31,749
அமாரா
மிஸ்டு கால்

427
00:36:31,750 --> 00:36:35,375
அமாரா
நல்லா இருக்கேன். ஹூலியன் கூட இருக்கேன்.

428
00:36:37,125 --> 00:36:39,291
- ஒண்ணும் பிரச்சனை இல்லயே?
- இல்ல.

429
00:36:45,375 --> 00:36:46,208
நீ ரொம்ப அழகா இருக்க.

430
00:36:48,250 --> 00:36:49,916
நீ ஒரு மாதிரியான ஆளு இல்ல.

431
00:36:51,833 --> 00:36:52,666
என்னது?

432
00:36:54,208 --> 00:36:55,541
சும்மா அமாரா சொன்னதுதான்.

433
00:37:00,375 --> 00:37:02,791
வா. நான் உன்னைத் திரும்ப
கூட்டிட்டுப் போய் விடணும்.

434
00:37:06,416 --> 00:37:07,250
ஆமா.

435
00:37:27,625 --> 00:37:28,458
மன்னிச்சிடு.

436
00:37:29,875 --> 00:37:30,958
உன்னை வருத்தப்படுத்திட்டேன்னு தோணுது.

437
00:37:31,500 --> 00:37:32,666
எனக்கு சின்னதா ஒரு டென்ஷன்.

438
00:37:33,583 --> 00:37:36,541
வேலை விஷயம்.
இப்போ நிறையப் போயிட்டு இருக்கு.

439
00:37:37,125 --> 00:37:37,958
எனக்குத் தெரியும்.

440
00:37:41,000 --> 00:37:42,125
என் நம்பரை கொடுக்கட்டுமா?

441
00:37:44,333 --> 00:37:46,208
எனக்கு அது பிடிக்கும்.

442
00:37:47,041 --> 00:37:48,500
நீ கொடுக்கலன்னா, என்னை
பயன்படுத்தப்பட்ட மாதிரி தோணும்.

443
00:37:49,583 --> 00:37:50,500
நாம மாத்திக்கலாம். இந்தா.

444
00:37:58,333 --> 00:37:59,208
இந்தா.

445
00:38:02,833 --> 00:38:03,666
நான் ஃபோன் பண்றேன்.

446
00:38:05,875 --> 00:38:06,708
சரி.

447
00:38:11,458 --> 00:38:12,458
குட் நைட், ஒரையா.

448
00:38:15,333 --> 00:38:16,166
குட் நைட்.

449
00:38:32,583 --> 00:38:34,083
அவளுக்கு குட் நைட் கிஸ் கூட கொடுக்கல.

450
00:38:43,000 --> 00:38:45,208
பாரு, என்கிட்ட
உன் காசு இல்ல, சரியா?

451
00:38:46,000 --> 00:38:46,958
ஆனா அதுக்கு முயற்சி பண்றேன்.

452
00:38:47,958 --> 00:38:48,833
கண்டிப்பா கொடுத்துடுவேன்.

453
00:38:58,750 --> 00:39:00,083
நிச்சயமா நீ கொடுப்ப,

454
00:39:01,166 --> 00:39:02,083
ஏன்னா நீ கொடுக்கலன்னா,

455
00:39:03,333 --> 00:39:05,083
நான் உன் காதலிகிட்ட
இருந்து வாங்கிப்பேன்.

456
00:39:05,958 --> 00:39:08,666
இந்த மாதிரி இடத்துல தங்கியிருக்கான்னா
கண்டிப்பா பெரிய இடத்து ஆள்தான்.

457
00:39:27,916 --> 00:39:30,165
அந்த நில உரிமையாளரோட
டீலை முடிச்சிட்டு இருக்கேன்,

458
00:39:30,166 --> 00:39:32,041
ஆனா ஹோட்டல் கண்டிப்பா கட்டப்படும்.

459
00:39:33,166 --> 00:39:36,125
சரி, உன்னைப் பத்திப் பேசலாம். இன்னைக்கு
காலைல மாத்திரை சாப்பிட்டியா?

460
00:39:39,875 --> 00:39:42,625
அந்தப் புது மருந்துகளுக்கு நான்
பழகல, எப்படி இருக்கும்னு தெரியும்ல?

461
00:39:43,291 --> 00:39:44,333
ஆமா, சாரி.

462
00:39:46,291 --> 00:39:49,333
நான் ரிசெப்ஷன்ல இருக்குற
அமாரா கூட நேரம் செலவிட்டேன்.

463
00:39:50,208 --> 00:39:52,083
- சரி. ஆமா.
- அப்புறம் அவளோட சில நண்பர்கள் கூட.

464
00:39:52,583 --> 00:39:55,458
சரி, ஒரு கவர்ச்சியான ஸ்பானிஷ் ஆளு
மேல காதல்ல விழாம இருந்தா சரிதான்.

465
00:39:59,291 --> 00:40:00,540
என்ன, விழுந்துட்டியா?

466
00:40:00,541 --> 00:40:02,165
சரி, நான் கேக்கவே மாட்டேன்.

467
00:40:02,166 --> 00:40:05,207
ஆனா உன்னால ஒரு ரெண்டு நாள்
ஒதுக்கி வர முடிஞ்சா,

468
00:40:05,208 --> 00:40:06,500
எனக்கு உன் உதவி தேவைப்படும்.

469
00:40:07,333 --> 00:40:10,249
உங்க ஆளுங்களை எங்களை கூப்பிட சொல்லுங்க,
என்ன முடியுதுனு பாப்போம்.

470
00:40:10,250 --> 00:40:11,083
நான் அதைச் செய்றேன்.

471
00:40:27,875 --> 00:40:28,875
எப்போதும்.

472
00:40:45,083 --> 00:40:46,458
எனக்கு ஆர்டிச்சோக் பிடிக்கும்.

473
00:40:48,500 --> 00:40:49,625
கவலையா இருக்கு…

474
00:40:53,416 --> 00:40:54,791
எனக்கு அது பிடிச்சிருக்கு.

475
00:41:17,958 --> 00:41:18,916
அற்புதம்! அடடா!

476
00:41:20,625 --> 00:41:21,666
கடவுளே. நாம ஆடனும்.

477
00:41:22,666 --> 00:41:23,625
அசத்துங்கம்மா!

478
00:41:37,375 --> 00:41:38,707
அப்பாடா. இங்க இருக்கியா.

479
00:41:38,708 --> 00:41:41,208
டவுன்ல இருக்குற பாருக்கு என் கூட
ஒரு டின்டர் டேட்டுக்கு வர்றியா?

480
00:41:42,583 --> 00:41:45,832
இல்ல. இல்ல, நான் உன் கூட
டேட்டுக்கு வர முடியாது.

481
00:41:45,833 --> 00:41:49,040
ஆமா, ஒருவேளை அவ சீரியல் கில்லரா
இருந்தா நீதான் என்னைக் காப்பாத்தணும்.

482
00:41:49,041 --> 00:41:52,332
நீ எங்க கூட மூணாவது ஆளா வரலாம்.
நாம மூணு பேரும் ஜாலியா இருக்கலாம்.

483
00:41:52,333 --> 00:41:55,750
ஒருவேளை நாங்க ரொம்ப நெருக்கமாயிட்டா,
அப்புறம் எனக்குக் கொஞ்சம் பொறாமை வரும்.

484
00:41:57,000 --> 00:41:59,541
டிரஸ் மாத்து. அன்னைக்கு நைட்
ஹூலியன் கூட என்ன நடந்ததுன்னு சொல்லு.

485
00:42:00,541 --> 00:42:01,375
போ.

486
00:42:02,166 --> 00:42:04,166
- சரி, யாரு இந்தப் பொண்ணு?
- ப்ரிஷா.

487
00:42:04,666 --> 00:42:07,333
லண்டன்ல இருந்து வந்த மெடிக்கல் ஸ்டூடண்ட்.

488
00:42:07,833 --> 00:42:10,875
- எவ்வளவு நாள் இங்க இருப்பா?
- மூணு வாரம்னு நினைக்கிறேன்.

489
00:42:11,541 --> 00:42:14,083
அது ரொம்பக் கம்மிதான். உனக்கு
அவ மேல காதல் வந்தா என்ன பண்ணுவ?

490
00:42:14,750 --> 00:42:16,707
எல்லாமே எப்பவும் நிலைக்காதுன்றதுக்காக,

491
00:42:16,708 --> 00:42:19,082
அதை அனுபவிக்கக் கூடாதுன்னு அர்த்தம் இல்ல.

492
00:42:19,083 --> 00:42:22,082
அப்புறம், இது ஒரு டூரிஸ்ட் தீவு.

493
00:42:22,083 --> 00:42:23,625
மக்கள் வருவாங்க போவாங்க.

494
00:42:25,125 --> 00:42:28,208
அதாவது, நீயும் இங்க எப்பவும் இருக்க மாட்ட,
ஆனா நீ ஜே கூட ரொமான்ஸ் பண்ணிருக்க.

495
00:42:30,625 --> 00:42:33,707
எனக்குத் தெரியும்! ஒரு அயோக்கியன் கூட
உதட்டோடு உதடு முத்தம் கொடுத்திருக்க.

496
00:42:33,708 --> 00:42:35,458
அது வெறும் முத்தம் தான்.

497
00:42:36,458 --> 00:42:38,041
அதுக்கப்புறம் அவன்கிட்ட இருந்து
தகவலே இல்ல.

498
00:42:41,083 --> 00:42:42,708
நீ அவ்வளவு மோசமா முத்தம் கொடுப்பியா?

499
00:42:43,500 --> 00:42:44,624
இல்ல.

500
00:42:44,625 --> 00:42:46,958
என்ன? ஒரு முத்தம் அப்புறம்
ஒண்ணும் இல்லன்னு சொல்றியா?

501
00:42:47,375 --> 00:42:48,291
நாக்கு பயன்படுத்தலயா?

502
00:42:49,166 --> 00:42:50,041
இல்ல அதிகமா பயன்படுத்தினியா?

503
00:42:51,333 --> 00:42:52,166
கடவுளே!

504
00:43:02,458 --> 00:43:05,875
சரி, நீ அவனை நிர்வாணமாப் பாத்துட்ட,
அதனால உனக்கு என்ன கிடைக்கும்னு தெரியும்.

505
00:43:06,541 --> 00:43:07,625
சரி.

506
00:43:08,333 --> 00:43:09,250
இதோ அவ வந்துட்டா.

507
00:43:10,500 --> 00:43:13,458
- நான் கொஞ்சம் தள்ளி இருக்கட்டுமா?
- இல்ல, அவ ஆபத்தானவளா இருக்கலாம்.

508
00:43:14,375 --> 00:43:15,208
சும்மா…

509
00:43:18,833 --> 00:43:21,124
- ப்ரிஷா?
- அமாரா.

510
00:43:21,125 --> 00:43:21,958
- ஹே.
- ஹாய்.

511
00:43:22,916 --> 00:43:25,374
இவ ரய், என் தோழி,
டெக்சாஸ்ல இருந்து வந்திருக்கா.

512
00:43:25,375 --> 00:43:27,374
- ஹாய். பாத்ததுல சந்தோஷம்.
- ஹாய். எனக்கும்தான்.

513
00:43:27,375 --> 00:43:30,666
சாரி, இவளைக் கூட்டிட்டு வந்தது உனக்கு
ஓகேதானே? அவளுக்கு இங்க நண்பர்கள் இல்ல.

514
00:43:31,625 --> 00:43:34,082
- உன்னைக் கடத்தலாம்னு இருந்தேன், ஆனா இப்போ…
- பாத்தியா?

515
00:43:34,083 --> 00:43:36,165
- சரி.
- புரிஞ்சுக்கிட்டா. டிரிங்க் வாங்கவா?

516
00:43:36,166 --> 00:43:37,416
ஆமா, டிரிங்க் நல்லா இருக்கும்.

517
00:43:37,916 --> 00:43:40,249
- ரய், உனக்கு ஏதாவது வேணுமா?
- ஆமா, ப்ளீஸ். நன்றி.

518
00:43:40,250 --> 00:43:42,665
- உனக்கு என்ன வேணும்?
- எனக்கு ஒரு மார்கரிட்டா.

519
00:43:42,666 --> 00:43:44,540
- எனக்கு காரம் பிடிக்கும்.
- அருமை.

520
00:43:44,541 --> 00:43:46,999
இங்க பாருங்க.
எனக்கு மூணு மார்கரிட்டா தர்றீங்களா?

521
00:43:47,000 --> 00:43:47,916
நிச்சயமா.

522
00:43:49,708 --> 00:43:50,999
இந்த பாட்டு பிடிக்கும்!

523
00:43:51,000 --> 00:43:54,333
சொர்க்கத்தில் காதலுக்குத்தான்
முதலிடம் என்று சொல்கிறார்கள்

524
00:43:55,000 --> 00:43:58,791
நாம் இந்த பூமியையே
ஒரு சொர்க்கமாக மாற்றுவோம்

525
00:43:59,625 --> 00:44:02,415
பூமிதான் ஒரு சொர்க்கம்

526
00:44:02,416 --> 00:44:03,540
நீங்க அழகா இருக்கீங்க.

527
00:44:03,541 --> 00:44:05,374
- இரு, இன்றிரவை ஞாபகம் வச்சுக்கணும்.
- சரி!

528
00:44:05,375 --> 00:44:06,291
ஃபோட்டோ எடுக்கலாம்.

529
00:44:11,125 --> 00:44:12,624
- கடவுளே.
- நீ நல்லா இருக்கியா?

530
00:44:12,625 --> 00:44:13,790
- அப்புறம்…
- நான் நலம்

531
00:44:13,791 --> 00:44:14,749
- நிச்சயமா?
- ஆமா.

532
00:44:14,750 --> 00:44:18,208
- உன் நடனம் ரொம்ப கவர்ச்சியா இருக்கு.
- அடக் கடவுளே. இல்ல. அழகா இருக்க!

533
00:44:23,541 --> 00:44:26,208
சரி, உனக்கு மின்னுற விளக்குகளால
ஏதாவது பிரச்சனை வருமா?

534
00:44:27,541 --> 00:44:28,375
ஆமா.

535
00:44:29,666 --> 00:44:32,416
ஆமா, அப்படிச் சொல்லலாம்.
எனக்கு வலிப்பு நோய் இருக்கு.

536
00:44:33,541 --> 00:44:34,458
சரி.

537
00:44:35,833 --> 00:44:37,458
- ஆனா அதைச் சமாளிக்க முடியும்தானே?
- இல்ல.

538
00:44:38,375 --> 00:44:41,540
இல்ல, என்னோடது ரொம்ப மோசமானது. என்னை
அறுவை சிகிச்சை பண்ணிக்கச் சொல்றாங்க,

539
00:44:41,541 --> 00:44:44,665
ஆனா அதனால என் ஞாபகங்கள் அழிய
நிறைய வாய்ப்பு இருக்கு, என் மருந்துகள்

540
00:44:44,666 --> 00:44:46,500
என் மூளையை செயலிழக்க
செய்யுற மாதிரி இருக்கு.

541
00:44:47,083 --> 00:44:48,333
அதனால நான் அதைச் சாப்பிடுறது இல்ல.

542
00:44:53,916 --> 00:44:57,291
சரி, நிறைய நோயாளிகள் இதனால
கஷ்டப்படுறாங்கன்னு எனக்குத் தெரியும்.

543
00:45:01,875 --> 00:45:03,874
சாரி, இதையெல்லாம் ஏன்
உன்கிட்ட சொன்னேன்னு தெரியல.

544
00:45:03,875 --> 00:45:04,875
யாருக்கும் சொல்லலை.

545
00:45:05,625 --> 00:45:07,833
சில சமயம் அந்நியர்கூட பேசுறது சுலபம்.

546
00:45:09,916 --> 00:45:10,916
நன்றி.

547
00:45:11,833 --> 00:45:14,416
யாரு நம்ம ஃபோட்டோவுக்கு
ஹார்ட் குடுத்திருக்காங்க பாரு.

548
00:45:14,958 --> 00:45:18,332
{\an8}- யாரோ ஒருத்தருக்கு பிடிச்சிருக்கு.
- அந்த ஒருத்தன் என்னை தவிர்க்கிறான், அமாரா.

549
00:45:18,333 --> 00:45:20,040
- அவன் உன்னைத் தவிர்க்கிறானா?
- ஆமா.

550
00:45:20,041 --> 00:45:21,749
- என்ன?
- ரய், ப்ளீஸ்.

551
00:45:21,750 --> 00:45:24,165
இவளுக்குக் காதல்ல இருக்கேன்னு
ஒத்துக்க மனசு இல்ல.

552
00:45:24,166 --> 00:45:25,708
சரி, நான் பாத்ரூம் போயிட்டு வரேன்.

553
00:45:27,916 --> 00:45:29,125
அவனோட ஆப்ஸைப் பாரு.

554
00:45:35,000 --> 00:45:36,082
அவள் ரொம்ப நல்லவள்.

555
00:45:36,083 --> 00:45:37,625
நீ என் படகுக்கு வரணும்.

556
00:45:44,541 --> 00:45:45,500
நன்றி.

557
00:45:49,666 --> 00:45:51,791
- போய் பாரு.
- நாளை.

558
00:45:53,000 --> 00:45:55,290
ஒரு தகுதியற்றவன் தன்னைத்தானே
பெரிய ஆளாக நினைத்துக்கொள்வான்

559
00:45:55,291 --> 00:45:57,915
ஆனால், அவனை ஒரு வெட்டிப் பயல்
என்றுதான் சொல்வார்கள்.

560
00:45:57,916 --> 00:46:03,457
எப்போதும் வாய் சவடால் பேசி, ஏதும்
செய்யாமல் சோம்பேறியாக உட்கார்ந்திருப்பான்.

561
00:46:03,458 --> 00:46:06,040
இல்லை, எனக்கு உன் ஃபோன் நம்பர் வேண்டாம்

562
00:46:06,041 --> 00:46:08,749
இல்லை, என் நம்பரை உனக்குத் தர மாட்டேன்

563
00:46:08,750 --> 00:46:11,165
இல்லை, உன்னை எங்கும் பார்க்க விரும்பலை

564
00:46:11,166 --> 00:46:13,624
இல்லை, எனக்காக நீ நேரம்
செலவிடவே வேண்டாம்

565
00:46:13,625 --> 00:46:16,207
இல்லை, எனக்குத் தகுதியற்றவர்கள்
யாரும் வேண்டாம்

566
00:46:16,208 --> 00:46:19,124
தகுதியற்ற ஒருவனால்
என் அன்பைப் பெற முடியாது

567
00:46:19,125 --> 00:46:20,040
கலக்கு, செல்லம்!

568
00:46:20,041 --> 00:46:22,832
தன் நண்பனின் காரில்
ஜன்னல் வழியாகப் பார்த்தபடி,

569
00:46:22,833 --> 00:46:24,708
என்னை வம்புக்கு இழுக்கப் பார்க்கும்

570
00:46:27,166 --> 00:46:30,207
- இங்க மேல வா. ரெண்டாவது வரியைப் பாடு.
- அமாரா!

571
00:46:30,208 --> 00:46:34,457
உன்னைப் பார்க்க குப்பை போல இருக்கிறது
உருப்படாத உன்னுடன் என்னால் பழக முடியாது

572
00:46:34,458 --> 00:46:37,665
- இல்லை, உன் நம்பர் எனக்கு வேண்டாம்
- இல்லை, உன் நம்பர் எனக்கு வேண்டாம்

573
00:46:37,666 --> 00:46:39,540
என் நம்பரை உனக்குத் தரமாட்டேன்

574
00:46:39,541 --> 00:46:42,665
இல்லை, உன்னை எங்கேயும் சந்திக்க மாட்டேன்

575
00:46:42,666 --> 00:46:44,208
இல்லை, எனக்காக நீ நேரம்
செலவிடவே வேண்டாம்

576
00:46:46,500 --> 00:46:48,666
ரய். ரய், நில்லு.

577
00:46:50,791 --> 00:46:52,541
பாரு, உனக்கு ஃபோன்
பண்ணாததுக்கு சாரி.

578
00:46:55,916 --> 00:46:57,000
இரு, என்ன…

579
00:46:58,083 --> 00:46:59,000
நீ நல்லா இருக்கியா?

580
00:47:00,083 --> 00:47:00,958
என்ன ஆச்சு?

581
00:47:03,916 --> 00:47:04,832
கார்லோஸ்.

582
00:47:04,833 --> 00:47:06,083
அது யாரு?

583
00:47:07,375 --> 00:47:08,333
அவன் கந்துவட்டிக்காரன்.

584
00:47:09,625 --> 00:47:10,750
நீ அவனுக்கு காசு கொடுக்கணும்.

585
00:47:12,333 --> 00:47:13,166
ஆமா.

586
00:47:13,666 --> 00:47:16,333
- சரி, உனக்கு வேணும்னா--
- உதவுறதா சொல்லி என்னை அவமானப்படுத்தாத.

587
00:47:21,250 --> 00:47:23,915
நான் ஏன் உனக்கு ஃபோன் பண்ணலன்னா,
என் கூட இருக்கிறது பாதுகாப்பானது இல்ல.

588
00:47:23,916 --> 00:47:25,833
கார்லோஸ் பிரச்சனைகள்
முடியுற வரைக்கும், நான்…

589
00:47:27,708 --> 00:47:30,000
நீ கவனமா இருக்கணும், சரியா?

590
00:47:35,250 --> 00:47:36,083
கவலைப்படாதே.

591
00:47:38,125 --> 00:47:39,500
நான் அவ்ளோ சீக்கிரம் பயப்பட மாட்டேன்.

592
00:47:56,041 --> 00:47:58,416
எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு, ஒரையா.

593
00:48:05,416 --> 00:48:07,166
நான் இங்க கொஞ்சக் காலம் தான் இருப்பேன்.

594
00:48:10,041 --> 00:48:11,291
நாம நேரத்தை வீணாக்குறோம்.

595
00:48:23,041 --> 00:48:24,125
இது ரொம்ப அழகா இருக்கு.

596
00:48:24,750 --> 00:48:25,916
ஆமா.

597
00:48:26,750 --> 00:48:27,708
ரொம்ப அழகா இருக்கு.

598
00:48:31,250 --> 00:48:32,874
ஆனா மக்கள் கூட்டம் அதிகமா இருக்கு.

599
00:48:32,875 --> 00:48:34,416
நாங்க இவங்களை கிரிஸ்னு கூப்பிடுவோம்.

600
00:48:35,708 --> 00:48:37,500
- என்னது?
- டூரிஸ்ட்ங்க.

601
00:48:39,125 --> 00:48:41,458
- அப்போ, நிறைய நிறைய கிரிஸ்.
- நிறைய நிறைய கிரிஸ்.

602
00:48:42,208 --> 00:48:43,916
நானும் ஒரு கிரியா?
நானும் ஒருத்தியா? ஆமா, ஆமா.

603
00:48:44,625 --> 00:48:45,750
ஆமா. நீ ஒரு கிரி தான்.

604
00:48:50,583 --> 00:48:53,708
- உனக்கு சௌகரியமா இருக்கா?
- ஆமா, நீ என்ன பண்ணுற?

605
00:49:07,958 --> 00:49:09,000
அடக் கடவுளே.

606
00:49:09,958 --> 00:49:11,333
இது வெறும் ஆரம்பம் தான்.

607
00:49:21,125 --> 00:49:22,250
நாம அதுக்குள்ள போறோமா?

608
00:49:36,791 --> 00:49:37,875
இதை நம்பவே முடியல.

609
00:49:40,916 --> 00:49:42,875
சரி, நீ ஏன் காசுக்காக கார்லோஸ்கிட்ட போன?

610
00:49:44,666 --> 00:49:45,999
அப்படி இல்லன்னா,

611
00:49:46,000 --> 00:49:49,707
எங்க அப்பா ஒரு டெவலப்பர் கூட
டீல் போட வேண்டியிருந்திருக்கும்.

612
00:49:49,708 --> 00:49:50,541
டெவலப்பரா?

613
00:49:52,625 --> 00:49:55,375
- அவங்களுக்கு இதுல என்ன லாபம்?
- அவங்களுக்கு எங்க படகு துறைகள் வேணும்.

614
00:49:56,166 --> 00:49:58,125
அவங்க அவருக்கு நிறைய நெருக்கடி தர்றாங்க.

615
00:49:59,125 --> 00:50:00,750
அப்புறம் எங்ககிட்ட வேற வழியும் இல்ல.

616
00:50:02,166 --> 00:50:03,583
அது ஒரு பெரிய பொறுப்பு தான்.

617
00:50:05,000 --> 00:50:07,207
எங்க அப்பாவோட தோள்ல
ஒரு 100 வருஷப் பழமையான

618
00:50:07,208 --> 00:50:08,375
பிசினஸோட சுமை இருக்கு.

619
00:50:10,333 --> 00:50:11,250
என் மேலயும் கூட.

620
00:50:18,416 --> 00:50:19,416
பார்த்து நட.

621
00:50:24,583 --> 00:50:26,250
- இங்க தான் நீ வாழுறியா?
- ஆமா.

622
00:50:26,875 --> 00:50:29,208
நான் ரொம்பக் காலமா
இந்தப் படகுல தான் வாழுறேன்.

623
00:50:29,916 --> 00:50:32,958
மனசுல இந்தக் கடல் சத்தம் இல்லாம
என்னால தூங்கவே முடியாது.

624
00:50:35,125 --> 00:50:36,375
உங்க அம்மா கூட இருந்திருக்காங்களா?

625
00:50:39,083 --> 00:50:41,541
எனக்கு எட்டு வயசு இருக்கும்போதே
அவங்க இறந்துட்டாங்க.

626
00:50:43,791 --> 00:50:44,708
வருத்தமா இருக்கு.

627
00:50:48,083 --> 00:50:49,208
இதோ என் அப்பா வந்துட்டாரு.

628
00:50:51,750 --> 00:50:52,583
இங்க வா.

629
00:50:54,416 --> 00:50:55,416
நீங்க ஒரையாவை சந்திக்கணும்.

630
00:50:57,083 --> 00:50:57,916
ஹலோ, ஒரையா.

631
00:50:58,458 --> 00:51:00,207
என் மகன் உன்னைப் பத்தி
நிறையச் சொல்லியிருக்கான்.

632
00:51:00,208 --> 00:51:01,875
- இங்கிலீஷ்ல பேசுங்கப்பா.
- மன்னிச்சிடு.

633
00:51:02,458 --> 00:51:05,208
- என் பேரு மாத்தேயோ.
- ரய். உங்களைச் சந்தித்ததுல மகிழ்ச்சி.

634
00:51:08,583 --> 00:51:10,333
நாம சந்திச்சிருக்கோமா?
பரிச்சயமான முகமா இருக்கே.

635
00:51:12,208 --> 00:51:14,457
இல்ல, அப்படித் தோணல.
நான் முதல் முறையா இங்க வர்றேன்.

636
00:51:14,458 --> 00:51:16,916
வினோதமா பண்ணாதீங்க. நாங்க சும்மா
ஒரு ரவுண்டு போகப்போறோம்.

637
00:51:17,833 --> 00:51:20,000
- சரி. ஜாலியா போயிட்டு வாங்க.
- நன்றி.

638
00:51:23,041 --> 00:51:23,958
வேலை செய்யத் தயாரா?

639
00:51:25,833 --> 00:51:26,666
வேலையா?

640
00:51:28,458 --> 00:51:30,791
- சரிங்க, சார்.
- போலாம் வா.

641
00:51:33,541 --> 00:51:35,541
எல்லாரும் கவனிங்க.

642
00:51:36,041 --> 00:51:37,540
இவ ஒரையா.

643
00:51:37,541 --> 00:51:39,499
இன்னைக்கு இவ நமக்கு
உதவியா இருப்பா, சரியா?

644
00:51:39,500 --> 00:51:41,541
நீ ஒரு பெண்ணை
படகுக்குக் கூட்டிட்டு வந்ததே இல்லையே.

645
00:51:44,791 --> 00:51:46,707
- அவர் என்ன சொன்னார்?
- ஒண்ணும் இல்ல.

646
00:51:46,708 --> 00:51:47,791
வேலையை ஆரம்பிக்கலாம்.

647
00:51:50,083 --> 00:51:52,791
- சின்ன மீன்களை எடுக்க வேணாம் சரியா?
- சரி. புரிஞ்சது.

648
00:51:53,375 --> 00:51:55,458
நாம சாப்பிட முடியாதுன்னா
அதுங்க ஏன் சாகணும்?

649
00:51:59,708 --> 00:52:00,583
உனக்கு இது இயல்பாவே வருது.

650
00:52:08,333 --> 00:52:09,166
சூப்பர்.

651
00:52:11,708 --> 00:52:14,333
என் வாழ்க்கையிலயே நான் இவ்ளோ நாத்தமா
இருந்ததே இல்லன்னு நினைக்கிறேன்.

652
00:52:17,666 --> 00:52:18,583
அப்போ சுத்தமாகலாம் வா.

653
00:52:27,833 --> 00:52:30,041
தண்ணிக்குள்ள வா!
தண்ணி ரொம்ப சூப்பரா இருக்கு.

654
00:52:30,541 --> 00:52:32,040
அதுல சுறா மீன்கள் இருக்குமா?

655
00:52:32,041 --> 00:52:33,916
கண்டிப்பா இருக்கும். இது கடல் ஆச்சே.

656
00:52:34,750 --> 00:52:37,375
வா. நீதான் அவ்வளவு சீக்கிரம்
பயப்பட மாட்டேன்னு நினைச்சேனே.

657
00:53:09,958 --> 00:53:12,083
நீ உன் அப்பாவைப் பெருமைப்பட வைக்கிற.

658
00:53:21,333 --> 00:53:24,333
இப்போ நாம செஞ்ச வேலையோட
பலனை அனுபவிக்கப் போறோம்.

659
00:53:26,083 --> 00:53:28,583
நீ சாப்பிட்டதுலேயே
இதுதான் சிறந்த மீனா இருக்கும்.

660
00:53:38,625 --> 00:53:40,582
- அடடா, இது நிஜமாவே ரொம்ப சூப்பர்.
- பாத்தியா?

661
00:53:40,583 --> 00:53:43,833
- இனிப்பாவும் வெண்ணெய் மாதிரியும் இருக்கு.
- இது உன் உடம்புக்கும் நல்லது.

662
00:53:52,500 --> 00:53:54,125
நீ உன் வேலையை ரசிக்குற, இல்லயா?

663
00:53:57,375 --> 00:53:58,375
ரசிக்காம இருக்க என்ன இருக்கு?

664
00:54:00,291 --> 00:54:03,041
நான் கடல்ல வாழுறேன்,

665
00:54:03,791 --> 00:54:06,958
என் குடும்பத்து கூட வேலை செய்யுறேன்,
அப்புறம் நீந்துறேன், மீன் பிடிக்கிறேன்.

666
00:54:08,000 --> 00:54:09,666
என் அப்பா, என் தாத்தாவை பெருமைப்படுத்துற

667
00:54:10,708 --> 00:54:11,583
வாய்ப்பு கிடைச்சிருக்கு.

668
00:54:12,583 --> 00:54:14,125
நான் என் அப்பாவைப் பாத்ததே இல்ல.

669
00:54:16,333 --> 00:54:17,665
- நிஜமாவா?
- ஆமா.

670
00:54:17,666 --> 00:54:20,166
அவர் டெக்சாஸின் பிசினஸ்மேன்,
எதப் பத்தியும் அக்கறை இல்ல.

671
00:54:21,291 --> 00:54:23,208
ஆனா எங்க அம்மா சூப்பரான ஆளு.

672
00:54:24,208 --> 00:54:27,625
அமெரிக்கக் கனவைத் தேடி அவங்க
மயோர்காவைப் பிரிஞ்சு போனாங்க.

673
00:54:28,916 --> 00:54:30,916
அவங்க அமெரிக்கா போனப்போ
அவங்ககிட்ட எதுவும் இல்ல,

674
00:54:31,416 --> 00:54:33,916
ஆனா ரொம்பக் கஷ்டப்பட்டு வேலை செஞ்சாங்க…

675
00:54:37,500 --> 00:54:39,708
அவங்க இப்போ சாதிச்சிருக்கிறது
நிஜமாவே ஒரு பெரிய விஷயம்.

676
00:54:41,375 --> 00:54:42,958
அவங்களுக்கு பெரிய வெற்றி கிடைச்சிருக்கு.

677
00:54:44,708 --> 00:54:46,375
- என்ன?
- ரொம்ப சாரி, ஆனா…

678
00:54:47,791 --> 00:54:51,916
சில நேரங்கள்ல அமெரிக்கர்கள் எதை வெற்றின்னு
நினைக்கிறாங்கன்றது எனக்கு ஆச்சரியம்தான்.

679
00:54:52,750 --> 00:54:53,625
நீ என்ன சொல்ல வர்ற?

680
00:54:55,291 --> 00:54:58,916
அதாவது, நீங்க சும்மா
ஒரு வெக்கேஷன் போறதுக்காகவும்,

681
00:54:59,500 --> 00:55:01,207
அப்புறம் நிறைய பொருட்களை வாங்கவும்தான்

682
00:55:01,208 --> 00:55:03,541
திரும்பத் திரும்ப வேலை செஞ்சிட்டே
இருக்கீங்கன்னு தோணுது…

683
00:55:05,208 --> 00:55:06,833
தெரியல. இங்க எங்க வாழ்க்கையைப் பாரு.

684
00:55:08,083 --> 00:55:12,000
எங்களுக்கும் பிரச்சனைகள் இருக்கு, ஆனா
இருக்குறதை வச்சு சந்தோஷமா இருக்கோம்.

685
00:55:13,250 --> 00:55:17,041
நமக்கு வேற என்ன வேணும்? ஒரு
மிஸ் அமெரிக்காவே என் படகுக்கு வந்துட்டா.

686
00:55:19,041 --> 00:55:22,250
சில நேரங்கள்ல நம்மகிட்ட இருக்கும்போதே

687
00:55:23,416 --> 00:55:24,416
அதை நாம அனுபவிக்கணும்.

688
00:55:26,916 --> 00:55:28,291
நான் சொல்றது உனக்குப் புரியுதா?

689
00:55:31,583 --> 00:55:32,583
உன்னைவிட நல்லாவே புரியுது.

690
00:55:36,250 --> 00:55:37,250
இங்க இருக்கிறது…

691
00:55:39,875 --> 00:55:41,541
இந்த இடம், இந்த கோடை காலம், இது…

692
00:55:42,916 --> 00:55:45,125
நான் எங்க இருக்கணும்னு
என்னை யோசிக்க வச்சிருக்கு.

693
00:55:49,375 --> 00:55:50,291
அது வந்து,

694
00:55:51,375 --> 00:55:54,625
இந்த உலகத்துல இந்த இடத்தைத் தவிர வேற
எங்கேயும் இருக்கணும்னு எனக்கு தோணல.

695
00:56:08,375 --> 00:56:09,375
நான் உன் ரூமை பாக்கலாமா?

696
00:58:24,291 --> 00:58:26,666
சரி. அப்படின்னா வார இறுதியில வேலை
செய்யணும் போலயே…

697
00:58:27,666 --> 00:58:30,707
சரி. நீங்க ஒரு நிமிஷம்--

698
00:58:30,708 --> 00:58:33,874
- ஹாய். இப்போ எப்படி இருக்க?
- சூப்பரா இருக்கேன்.

699
00:58:33,875 --> 00:58:37,125
- நீ பிரகாசமாவும் சந்தோஷமாவும் தெரியுற.
- ஆமா, நான் அப்படித்தான் இருக்கேன்.

700
00:58:39,875 --> 00:58:43,374
சரி. நீ பாதுகாப்பா இருக்கிற வரைக்கும்
எனக்கு எதுவும் தெரிய வேணாம்.

701
00:58:43,375 --> 00:58:44,790
உனக்கு ஸ்பானிஷ் பசங்கள பத்தி தெரியாது.

702
00:58:44,791 --> 00:58:48,165
நான் இங்கேயே இருந்திருந்தா, உனக்கு எத்தனை
சகோதரங்க இருந்திருப்பாங்களோ தெரியாது.

703
00:58:48,166 --> 00:58:49,708
அம்மா, ப்ளீஸ்.

704
00:58:50,916 --> 00:58:54,040
உங்களுக்கு நேரம் இருந்தா, அந்த டான்ஸ்
கம்பெனி பத்திப் பேச நினைக்கிறேன்.

705
00:58:54,041 --> 00:58:54,875
ஆமா, ஆமா, ஆமா.

706
00:58:55,375 --> 00:58:57,082
சாரி, அந்த… இல்ல, எனக்குப் பிடிக்கல…

707
00:58:57,083 --> 00:58:59,082
- அதோ அது.
- சரி, சரி.

708
00:58:59,083 --> 00:59:01,041
இருங்க. உங்களுக்கு
கார்சியா குடும்பத்தை தெரியுமா?

709
00:59:01,583 --> 00:59:03,500
ஆமா, அந்த கம்பெனியைத்தான்
நாங்க வாங்கப் போறோம்.

710
00:59:05,333 --> 00:59:06,874
உங்ககிட்ட தேவையான நிலம் இல்லையா?

711
00:59:06,875 --> 00:59:09,832
கார்சியா குடும்பத்திடம்தான் இத்தீவோட
முக்கியமான படகுத் துறைகள் இருக்கு.

712
00:59:09,833 --> 00:59:11,916
அவங்களை வாங்காம எங்களால
ஹோட்டல் கட்ட முடியாது.

713
00:59:17,416 --> 00:59:19,000
நீ பழகுற பையன் அவன்தானா?

714
00:59:19,791 --> 00:59:20,916
ஒரு கார்சியா பையனா?

715
00:59:24,458 --> 00:59:26,125
- லேனா, ரூமை விட்டு போறியா?
- கண்டிப்பா.

716
00:59:27,291 --> 00:59:29,874
இங்க பாருங்க, நீங்க மட்டும் என் கூட…

717
00:59:29,875 --> 00:59:31,915
- செல்லம், நான்--
- இல்ல அம்மா, ப்ளீஸ் வேணா.

718
00:59:31,916 --> 00:59:34,832
- எனக்கு நிலைமை தெரியும். வேணாம்.
- செல்லம், இது நல்லதுக்குத்தான், சரியா?

719
00:59:34,833 --> 00:59:37,124
அவங்க பிசினஸ்… முடிஞ்சுடுச்சு.

720
00:59:37,125 --> 00:59:39,540
அவங்க ஒரு லோனுக்காகக் காத்திருக்காங்க.
அவங்களுக்கு அவகாசம் தேவை.

721
00:59:39,541 --> 00:59:40,958
இன்னொரு லோனா?

722
00:59:42,333 --> 00:59:44,416
அது அவங்களை இன்னும் கடன்ல தான் தள்ளும்.

723
00:59:46,750 --> 00:59:48,665
நான் அவங்களுக்கு
சுதந்திரத்தை தர்றேன், சரியா?

724
00:59:48,666 --> 00:59:51,832
தோத்துப் போன ஒரு பிசினஸ்ல மாட்டிக்கிட்டு
இருக்கிறதை விட மேலான விடுதலை.

725
00:59:51,833 --> 00:59:54,082
ஆனா அவங்க மாட்டிக்கல.
இங்கிருக்க விரும்புறாங்க.

726
00:59:54,083 --> 00:59:55,458
அவங்க செய்யுற வேலைய விரும்புறாங்க.

727
00:59:56,833 --> 00:59:57,750
அவங்களுக்கு இது…

728
00:59:58,708 --> 01:00:00,041
இது காசு பத்தின விஷயம் இல்ல.

729
01:00:00,916 --> 01:00:04,124
இது அதை விட மேலானது, இது
அவங்க குடும்பம், அவங்க பிறந்த இடம்--

730
01:00:04,125 --> 01:00:06,750
இல்ல, தெரியும், எனக்கு
கார்சியா குடும்பத்தைப் பத்தித் தெரியும்,

731
01:00:07,541 --> 01:00:09,375
நானும் அவங்களுக்காக வருத்தப்படுறேன்.

732
01:00:10,125 --> 01:00:10,958
சரியா? நிஜமா.

733
01:00:12,291 --> 01:00:15,749
நமக்குள் சொல்லணும்னா, அதோட மதிப்பை விட
ரெண்டு மடங்கு காசு தரேன்னு சொன்னேன்.

734
01:00:15,750 --> 01:00:16,832
நான் ஒண்ணும் வில்லி இல்ல.

735
01:00:16,833 --> 01:00:19,332
மாத்தேயோ கார்சியா இனி
ஒரு நாள் கூட வேலை செய்யத் தேவையில்ல.

736
01:00:19,333 --> 01:00:20,833
- அவரோட மகனும்தான்.
- அது விஷயம் இல்ல.

737
01:00:21,416 --> 01:00:22,791
இதுதான் அவங்களோட சந்தோஷம்.

738
01:00:23,583 --> 01:00:24,958
அம்மா, இதுதான் அவங்க
வாழ்க்கையோட அர்த்தம்.

739
01:00:29,250 --> 01:00:31,957
லட்சியவாதியா இருக்கிறது
ரொம்பச் சுலபம், சரியா?

740
01:00:31,958 --> 01:00:34,291
ஆனா பிசினஸ்னா அது பிசினஸ்தான்,
இது தனிப்பட்ட விஷயம் இல்ல.

741
01:00:36,416 --> 01:00:37,250
ப்ளீஸ்.

742
01:00:40,166 --> 01:00:41,000
ப்ளீஸ்.

743
01:00:43,416 --> 01:00:44,250
எனக்காக.

744
01:00:47,375 --> 01:00:50,541
பாரு, என்னால முடிஞ்சதை நான் பண்றேன், ஆனா
உறுதியா சொல்ல முடியாது, சரியா?

745
01:01:03,791 --> 01:01:05,583
நான் உன்கிட்ட ஒரு விஷயம் பத்தி பேசலாமா?

746
01:01:14,000 --> 01:01:17,333
எல்லாத்தையும் மறந்துட்டு நாம
ஒரு நாள் மட்டும் ஜாலியா இருக்கலாமா?

747
01:01:18,750 --> 01:01:19,583
ப்ளீஸ்?

748
01:01:21,958 --> 01:01:22,791
சரி.

749
01:01:59,458 --> 01:02:02,499
ரய், செல்லம், இங்க இருக்கியா?

750
01:02:02,500 --> 01:02:03,666
ஹே.

751
01:02:04,166 --> 01:02:07,624
இன்னைக்கு நாள் முழுக்க மீட்டிங்ஸ் இருக்கு,
ஆனா கிளம்பும் முன் உன்னை பாக்க நினைச்சேன்.

752
01:02:07,625 --> 01:02:08,958
மருந்து மாத்திரையெல்லாம் வாங்கிட்டியா?

753
01:02:09,500 --> 01:02:13,040
நான் உனக்கு ரெண்டு டிரஸ் வாங்குனேன்,

754
01:02:13,041 --> 01:02:16,124
பச்சை அப்புறம் பிங்க், இதுல எது நிதி
திரட்டும் நிகழ்ச்சிக்கு வேணும்னு சொல்லு.

755
01:02:16,125 --> 01:02:18,125
கார்சியா குடும்பத்துக்காக
ஏதாவது வழி பண்ணீங்களா?

756
01:02:18,791 --> 01:02:21,541
இன்னும் இல்ல, ஆனா அதுக்கு
முயற்சி பண்ணிட்டு இருக்கேன், சரியா?

757
01:02:22,916 --> 01:02:24,457
- சாரி, எங்களுக்கு நேரமாயிடுச்சு.
- ஆமா.

758
01:02:24,458 --> 01:02:25,457
இதோ.

759
01:02:25,458 --> 01:02:28,083
நான் இன்னைக்கு பிஸி, ஆனா நாம
நாளைக்கு காலைல டிஃபன் சாப்பிடலாமா?

760
01:02:30,208 --> 01:02:32,208
நீ நல்லா இருக்கியா?
நீ பாக்க கொஞ்சம் டல்லா இருக்க.

761
01:02:33,958 --> 01:02:35,125
நான் நல்லா இருக்கேன்.

762
01:02:36,291 --> 01:02:37,666
சரி. லவ் யூ.

763
01:02:38,291 --> 01:02:39,166
அப்புறம் பாக்கலாம்.

764
01:02:48,208 --> 01:02:51,166
ஹூலியன்
உனக்கு இருட்டைப் பாத்தா பயமா?

765
01:02:55,000 --> 01:02:56,208
நீ என்னை நம்புறியா?

766
01:02:57,583 --> 01:02:58,416
ஆமா.

767
01:03:00,750 --> 01:03:01,958
விளக்கை அணை.

768
01:03:05,833 --> 01:03:06,833
சரி.

769
01:03:16,041 --> 01:03:19,833
இது எனக்கு ரொம்பப் பிடிச்ச உணர்வு.

770
01:03:21,250 --> 01:03:23,708
நீ உன்னைச் சுத்தி இருக்குற
எல்லாத்தோடும் ஒண்ணா கலந்துடுவ.

771
01:03:25,583 --> 01:03:28,208
விளக்கு எரிஞ்சிட்டு இருக்கும்போது வர்ற
பிரச்சனைகளை மறக்க இது உதவுது.

772
01:03:31,916 --> 01:03:34,375
உன் பயங்களை எதிர்கொள்றது நல்லது, ஒரையா.

773
01:03:37,833 --> 01:03:39,333
அதை வேற எப்படி சரி பண்ண முடியும்?

774
01:04:00,166 --> 01:04:01,458
நாம இங்க தான் சந்திச்சோம்.

775
01:04:04,583 --> 01:04:05,583
இங்கேயே இரு.

776
01:04:21,291 --> 01:04:23,000
உனக்கு நீந்தத் தெரியலன்னா நான் உதவுறேன்.

777
01:04:35,250 --> 01:04:36,500
கலைக்கான ஓர் இரவு

778
01:04:54,833 --> 01:04:55,666
ஹே.

779
01:04:56,250 --> 01:04:58,041
உன் முகம் ரொமான்ஸ் பண்ணிட்டு
வந்த மாதிரி இருக்கே?

780
01:04:59,041 --> 01:05:00,915
சரி, விஷயத்தைச் சொல்லு.

781
01:05:00,916 --> 01:05:03,624
நாம பேசுறதுக்கு நிறைய விஷயங்கள்
இருக்குன்னு மட்டும் வச்சுக்கோ.

782
01:05:03,625 --> 01:05:06,250
அந்தத் தீவுல என்னதான் நடக்குது?
எல்லாத்தையும் சொல்லு.

783
01:05:07,041 --> 01:05:08,375
ஹே, நான் காதல்ல விழுந்துட்டேன்னு தோணுது.

784
01:05:10,791 --> 01:05:13,625
- அதாவது, ஒவ்வொரு துளியிலும்.
- ஒவ்வொரு துளியிலும்…

785
01:05:14,208 --> 01:05:16,041
இப்போ நீ யாருன்னே தெரியலையே?

786
01:05:16,666 --> 01:05:20,125
சரி, இப்போ என்ன பண்ணப்போற? இன்னும்
சில நாள்ல நீ வீட்டுக்கு வரலையா?

787
01:05:21,541 --> 01:05:22,541
எனக்குத் தெரியல.

788
01:05:23,541 --> 01:05:25,874
வாவ். அப்போ இது சீரியஸான விஷயமா?

789
01:05:25,875 --> 01:05:27,458
ரோமியோ ஜூலியட் மாதிரி சீரியஸான காதல்.

790
01:05:27,916 --> 01:05:29,541
இரு, அவங்கள்ல ஒருத்தர் இறந்துட்டாங்கல?

791
01:05:30,125 --> 01:05:32,374
- ஹே, நான் லேனா வந்திருக்கேன்.
- நான் போகணும்.

792
01:05:32,375 --> 01:05:34,541
- சரி, அப்புறம் பேசலாம். ஃபோன் பண்ணு.
- சொல்லுங்க?

793
01:05:36,750 --> 01:05:39,165
ஹாய், ரய். உங்க அம்மாவால
இன்னைக்குக் காலைல வர முடியாது.

794
01:05:39,166 --> 01:05:41,583
இன்னைக்கு ராத்திரி நடக்குற
ஈவென்ட் வேலையில அவங்க ரொம்ப பிஸி.

795
01:05:42,833 --> 01:05:44,958
இங்க பாரு, இதை நான்
சொல்லக்கூடாதுன்னு தெரியும்,

796
01:05:46,666 --> 01:05:47,500
ஆனா…

797
01:05:48,416 --> 01:05:49,916
கார்சியா குடும்பத்தினர்
விக்க சம்மதிச்சுட்டாங்க.

798
01:05:51,666 --> 01:05:53,458
ரெட்வின் டீம் இப்போ
அந்த டீலை முடிச்சிட்டு இருக்காங்க.

799
01:05:54,958 --> 01:05:56,874
- என்னது?
- ரொம்ப சாரி, ரய்--

800
01:05:56,875 --> 01:05:57,708
நான் கிளம்பணும்.

801
01:06:19,541 --> 01:06:21,916
இல்ல. இல்ல.

802
01:06:32,583 --> 01:06:33,625
ஹூலியன்!

803
01:06:34,875 --> 01:06:36,083
ஹூலியன், என்ன நடந்தது?

804
01:06:37,916 --> 01:06:38,750
இதை யாரு பண்ணா?

805
01:06:40,291 --> 01:06:42,791
நேத்து ராத்திரி கார்லோஸ் தான் இதை பண்ணான்.

806
01:06:45,041 --> 01:06:45,916
எங்க அப்பாவுக்கு…

807
01:06:49,125 --> 01:06:50,291
இதுதான் கடைசி எல்லை.

808
01:06:52,125 --> 01:06:53,333
அவர் ரெட்வின் கூட டீல் போட்டுட்டாரு.

809
01:07:00,541 --> 01:07:01,541
எல்லாம் என் தப்புதான்.

810
01:07:05,125 --> 01:07:06,000
இல்ல.

811
01:07:08,666 --> 01:07:09,500
இல்ல, உன் தப்பு இல்ல.

812
01:07:14,666 --> 01:07:16,291
ஹூலியன், எங்க அம்மா ரெட்வின்
கம்பெனியிலதான் வேலை செய்றாங்க.

813
01:07:22,833 --> 01:07:25,416
- ரொம்ப சாரி. எனக்கு இப்பதான் தெரியும்--
- நீ கிளம்பணும், ரய்.

814
01:07:26,500 --> 01:07:27,583
- என்ன? ஆனா நான்--
- கிளம்பு!

815
01:07:28,875 --> 01:07:29,708
கிளம்பிடு.

816
01:07:39,583 --> 01:07:40,416
அம்மா?

817
01:07:41,666 --> 01:07:42,625
அம்மா, என்ன நடந்தது?

818
01:07:43,375 --> 01:07:45,041
கொஞ்சம் வெளிய போறீங்களா? நன்றி.

819
01:07:45,541 --> 01:07:47,208
நீங்க அவங்களுக்கு உதவுறதா
சத்தியம் பண்ணீங்க.

820
01:07:47,833 --> 01:07:51,166
நான் செஞ்சேன். அவங்க பிசினஸ் மூழ்கிட்டு
இருந்தது, நான் அவங்களுக்கு கை குடுத்தேன்.

821
01:07:52,000 --> 01:07:55,250
இப்போ அவங்ககிட்ட காசு, மத்தப் பொருட்கள்
இருக்கு, ஆனா உங்களை மாதிரி பூர்வீகம் இல்ல.

822
01:07:56,125 --> 01:07:59,165
- அதுக்கு என்ன அர்த்தம்?
- எல்லாத்தையும் பணத்தை வச்சு அளக்குறீங்க.

823
01:07:59,166 --> 01:08:02,040
உங்களுக்கு அதிகாரம் பிடிக்கும்,
நீங்க ஒரு அதிகாரத் தோரணை உள்ள பாஸ்.

824
01:08:02,041 --> 01:08:05,958
அம்மா, உங்க சொந்த ஊருக்கு என்னை கூட்டிட்டு
வந்தீங்க, ஆனா ஹோட்டலை விட்டு வெளில போகல.

825
01:08:08,916 --> 01:08:10,333
நீங்க இதெல்லாம் எதுக்காக பண்றீங்க?

826
01:08:11,958 --> 01:08:12,791
எதுக்காகவா?

827
01:08:13,750 --> 01:08:16,291
நான் ஏன் இதைச் செய்றேனா?
உனக்காகத்தான் செய்றேன்.

828
01:08:17,541 --> 01:08:19,125
உனக்கு அது ஏன் புரியல?

829
01:08:20,208 --> 01:08:22,250
எனக்கு பிடிச்சுதான்
எப்பவும் பிஸியா இருக்கேனா என்ன?

830
01:08:23,166 --> 01:08:25,041
நிச்சயமா உன் கூட
நேரம் செலவிடத்தான் விரும்புறேன்.

831
01:08:25,750 --> 01:08:27,707
ஆனா, நான் சிறப்பா செய்யுற இந்த வேலை

832
01:08:27,708 --> 01:08:30,041
எனக்கு கிடைச்சதுக்கு ஒவ்வொரு நாளும்
கடவுளுக்கு நன்றி சொல்றேன்,

833
01:08:30,791 --> 01:08:34,958
ஏன்னா இதனாலதான் உனக்குத் தேவையான
எல்லாத்தையும் என்னால செய்ய முடியுது, ரய்.

834
01:08:38,833 --> 01:08:40,125
நீதான் என் வாழ்க்கையோட நோக்கம்.

835
01:08:41,375 --> 01:08:42,375
சரியா? அதனால…

836
01:08:44,125 --> 01:08:46,958
கார்சியா குடும்பத்துக்கு நடந்ததை மாத்த
முடிஞ்சிருந்தா, கண்டிப்பா செஞ்சிருப்பேன்.

837
01:08:49,208 --> 01:08:50,333
என்னை நம்பு, நான் செஞ்சிருப்பேன்.

838
01:08:55,583 --> 01:08:57,916
அதனால, ஆழமா மூச்சை உள்ளிழு,

839
01:09:00,041 --> 01:09:01,250
அப்புறம் அந்த விழாவிற்கு தயாராகு.

840
01:09:02,666 --> 01:09:04,500
இது ரொம்ப முக்கியமான ஒரு இரவு.

841
01:09:05,250 --> 01:09:08,208
நமக்கு இங்க இன்னும் கொஞ்ச நாள்தான்
இருக்கு, அப்புறம் எனக்கு உன் உதவி தேவை.

842
01:10:26,416 --> 01:10:27,415
நீ கண்ணாடி முன்னாடி நின்னு

843
01:10:27,416 --> 01:10:31,166
உன்னையே அப்படி ஒரு தீர்க்கமான
பார்வை பாத்துட்டு இருக்கியே,

844
01:10:31,875 --> 01:10:32,833
ஆனா உண்மையை சொல்லணும்னா,

845
01:10:33,625 --> 01:10:34,583
நீ செம ஹாட்டா இருக்க.

846
01:10:36,458 --> 01:10:38,625
அப்புறம் சொல்லப்போனா,
இதுல உன் தப்பு எதுவும் இல்ல.

847
01:10:39,708 --> 01:10:41,666
உலகம் அப்படித்தான் நடக்குது.

848
01:10:43,125 --> 01:10:45,958
நீங்க இல்லன்னா, வேற யாராவது
ஒருத்தர் இதைச் செஞ்சிருப்பாங்க.

849
01:10:47,250 --> 01:10:48,208
இன்னும் மோசமா.

850
01:10:50,541 --> 01:10:51,791
ஹூலியன் கண்டிப்பா வருவான்.

851
01:10:53,083 --> 01:10:53,916
சத்தியமா சொல்றேன்.

852
01:11:35,500 --> 01:11:36,458
இல்ல.

853
01:11:38,000 --> 01:11:39,083
என்னை விடு.

854
01:11:53,333 --> 01:11:54,208
உனக்கு என்ன வேணும்?

855
01:11:55,708 --> 01:11:56,541
அது வந்து,

856
01:11:57,833 --> 01:12:00,500
உன் காதலன் எனக்கு நிறைய காசு கொடுக்கணும்.

857
01:12:02,666 --> 01:12:04,874
அவன் அழகான முகம்
உனக்கு ரொம்பப் பிடிக்கும்,

858
01:12:04,875 --> 01:12:07,541
அதனால அதை சிதைக்காம
தடுக்கணும்னு நீ நினைப்பனு தோணுது.

859
01:12:09,166 --> 01:12:11,875
- உனக்கு உன் பணம் கிடைக்கும்.
- கொஞ்சம் பொறுமையா இரு, ராணி.

860
01:12:12,791 --> 01:12:15,208
எல்லாமே பணம் சம்பந்தப்பட்டது இல்ல.

861
01:12:15,791 --> 01:12:18,249
சில விஷயங்கள் பணத்தை விட மேலானது,

862
01:12:18,250 --> 01:12:20,791
- சாப்பாடு, ஒயின், அப்புறம் பெண்கள்.
- என்னை விடு.

863
01:12:24,625 --> 01:12:26,915
இன்னொரு தடவை அவளைத் தொட்டா,
உன்னைக் கொன்னுடுவேன்.

864
01:12:26,916 --> 01:12:27,791
உனக்குப் புரியுதா?

865
01:12:32,333 --> 01:12:33,541
உன் பணம்.

866
01:12:38,916 --> 01:12:41,416
பாவம். இவ கூட இருந்தா
ஜாலியா இருந்திருக்கும்.

867
01:12:44,666 --> 01:12:46,249
இங்கிருந்து ஓடிப் போயிடு.

868
01:12:46,250 --> 01:12:48,790
இனிமே எங்க பக்கத்துல வர்றதுக்கு
உனக்கு எந்த காரணமும் இல்ல.

869
01:12:48,791 --> 01:12:51,208
கண்டிப்பா. அடுத்த முறை பாப்போம்.

870
01:12:55,625 --> 01:12:57,624
- நீ நல்லா இருக்கியா?
- நான் நல்லா இருக்கேன்.

871
01:12:57,625 --> 01:12:59,083
- உறுதியாவா?
- நான் நல்லா இருக்கேன்.

872
01:13:00,375 --> 01:13:01,208
நான் நல்லா இருக்கேன்.

873
01:13:04,291 --> 01:13:05,333
அந்த அறை செமையா இருந்தது.

874
01:13:08,291 --> 01:13:09,708
உனக்கு கோபம் வராம
பாத்துக்கணும்னு ஞாபகப்படுத்து.

875
01:13:16,166 --> 01:13:18,750
என் அம்மாவைப் பத்தி உன்கிட்ட சொல்லாததுக்கு
என்னை மன்னிச்சிடு.

876
01:13:20,083 --> 01:13:22,208
- என்னால சரி பண்ண முடியும்னு நினைச்சேன்.
- பரவால்ல.

877
01:13:23,583 --> 01:13:24,583
இது உன் தப்பு இல்ல.

878
01:13:41,958 --> 01:13:44,750
உன் டிரஸ் வீணாயிடுச்சு.

879
01:13:47,291 --> 01:13:50,000
உன்னோட அந்தச் சுற்றுச்சூழல் புகாரை
நான் அங்க சொல்லிட்டு இருந்தேன்.

880
01:13:51,083 --> 01:13:53,582
அந்தப் புல்லு, கெமிக்கல்ஸ் பத்தி எல்லாம்--

881
01:13:53,583 --> 01:13:54,625
வாவ்.

882
01:14:03,625 --> 01:14:04,625
எனக்கு இப்போ நீ வேணும்.

883
01:15:11,958 --> 01:15:12,791
சியர்ஸ்.

884
01:15:18,250 --> 01:15:22,291
ரய்
என் சூட்ல. நீ எங்களுக்கு வேணும்!

885
01:15:23,916 --> 01:15:24,999
ஆமா.

886
01:15:25,000 --> 01:15:28,582
பணக்காரங்க எதையெல்லாம் விட்டுட்டுப்
போறாங்கன்றது ஆச்சரியமாத்தான் இருக்கு.

887
01:15:28,583 --> 01:15:30,416
அந்தத் தொலைஞ்சு போன பொருட்கள்
இருக்குற இடம் ஒரு புதையல்தான்.

888
01:15:31,458 --> 01:15:32,625
நான் பாக்க எப்படி இருக்கேன்?

889
01:15:33,916 --> 01:15:34,750
நல்லா இருக்க.

890
01:15:37,916 --> 01:15:39,500
நான் உங்களை கீழ பாக்குறேன்.

891
01:15:55,916 --> 01:15:57,790
ஏதாவது வழி இருக்கான்னு
யோசிச்சுட்டு இருக்கேன்.

892
01:15:57,791 --> 01:15:59,665
ஒத்துக்கிறேன், ஆனா ரொம்ப
நேரமாயிடுச்சோன்னு தோணுது.

893
01:15:59,666 --> 01:16:00,500
நீ தயாரா?

894
01:16:02,375 --> 01:16:03,291
ஆரம்பிக்கலாம்.

895
01:16:04,500 --> 01:16:05,333
அம்மா?

896
01:16:06,958 --> 01:16:09,166
உங்களை ஹூலியன் கார்சியாவுக்கு
அறிமுகப்படுத்த விரும்புறேன்.

897
01:16:10,083 --> 01:16:12,208
உங்களை சந்தித்ததுல
ரொம்ப சந்தோஷம், செனோரா பெரா.

898
01:16:13,041 --> 01:16:14,458
உங்கள பத்தி நிறைய
கேள்விப்பட்டிருக்கேன்.

899
01:16:16,500 --> 01:16:17,750
உங்களுக்கு டிரிங்க் எடுத்துட்டு வரேன்.

900
01:16:24,875 --> 01:16:28,250
நான் யாருன்னும், எனக்கு ரெட்வின் கூட
இருக்க தொடர்பையும் அவன்கிட்ட சொன்னியா?

901
01:16:29,250 --> 01:16:30,125
ஆமா.

902
01:16:31,791 --> 01:16:33,416
உன் வலிப்பு நோய் பத்தி சொன்னியா?

903
01:16:46,583 --> 01:16:48,874
இனிய இரவு, குட் ஈவினிங்.

904
01:16:48,875 --> 01:16:51,790
மயோர்காவோட இந்த ஒரு புது
அத்தியாயத்தைக் கொண்டாட

905
01:16:51,791 --> 01:16:55,041
எங்க கூட இங்க வந்திருக்கிற
எல்லாருக்கும் நன்றி.

906
01:16:55,708 --> 01:16:58,957
இந்த அழகான தீவோட
கலாச்சாரத்தைப் பாதுகாக்குற

907
01:16:58,958 --> 01:17:03,208
ஒரு கலை மையத்தை அறிமுகப்படுத்துறதுல
நாங்க ரொம்ப மகிழ்ச்சி அடையுறோம்.

908
01:17:03,791 --> 01:17:07,249
உங்கள்ள சிலருக்குத் தெரியும், நான் ரொம்பக்
காலத்துக்கு முன்னாடி இங்கதான் வளர்ந்தேன்,

909
01:17:07,250 --> 01:17:10,666
அதனால திரும்ப ஏதாவது செய்ய ஒரு வாய்ப்பு
கிடைச்சது ரொம்ப நல்லா இருக்கு,

910
01:17:11,333 --> 01:17:14,957
அது இந்த கலை மையம் மூலமா மட்டும் இல்லாம,

911
01:17:14,958 --> 01:17:18,583
ஒரு உலகத்தரம் வாய்ந்த ரிசார்ட்டை
மயோர்காவுக்கு கொண்டு வரது மூலமாவும் தான்.

912
01:17:19,083 --> 01:17:21,625
அதனால, எல்லாரும்

913
01:17:22,958 --> 01:17:23,833
வாழ்த்து சொல்லுவோம்…

914
01:17:27,750 --> 01:17:31,875
மயோர்காவுக்காக ஒரு வாழ்த்து சொல்லுவோம்.

915
01:17:32,458 --> 01:17:34,250
- மயோர்காவுக்காக!
- மயோர்கா!

916
01:17:48,833 --> 01:17:49,708
மாத்தேயோ.

917
01:17:54,833 --> 01:17:56,083
உன்னை பாக்குறது ரொம்ப சந்தோஷம்.

918
01:17:58,708 --> 01:18:00,208
உன்னைத் திரும்ப
பாப்பேன்னு நினைக்கவே இல்ல.

919
01:18:02,541 --> 01:18:03,500
ரொம்பக் காலமாயிடுச்சு.

920
01:18:05,250 --> 01:18:06,083
ஆமா.

921
01:18:10,208 --> 01:18:13,790
பாரு, இதுல எதுவுமே தனிப்பட்டது இல்லன்னு
நீ தெரிஞ்சுக்கணும்னு நான் விரும்புறேன்.

922
01:18:13,791 --> 01:18:14,625
இசோல்டே,

923
01:18:16,166 --> 01:18:17,916
நமக்கிடையில இருக்குற
எல்லாமே தனிப்பட்டதுதான்.

924
01:18:21,958 --> 01:18:24,375
அதாவது, என் எண்ணம் என்னன்னு
நான் விளக்க விரும்புறேன்.

925
01:18:24,875 --> 01:18:27,333
நீ எதையும் விளக்கத் தேவையில்லை.
அதாவது, நீ சொல்றது சரிதான்.

926
01:18:28,541 --> 01:18:31,375
இந்தத் தீவு மாறிட்டே இருக்கு, அப்புறம்
என்னால அதைச் சமாளிக்க முடியல.

927
01:18:31,958 --> 01:18:32,875
நான் முயற்சி பண்ணேன்.

928
01:18:34,458 --> 01:18:36,541
என்னால முடிஞ்ச வரை
என் பிசினஸை தக்க வைக்க பாத்தேன்.

929
01:18:38,375 --> 01:18:39,208
ஆனா கடைசியில…

930
01:18:43,916 --> 01:18:47,082
- உன்கிட்ட ஒண்ணு மட்டும் கேட்கணும்.
- கேளு.

931
01:18:47,083 --> 01:18:49,916
நீ அந்த ஹோட்டலைக் கட்டி அடுத்து
என்ன பண்ணப்போறேன்னு முடிவு பண்ணும்போது,

932
01:18:51,166 --> 01:18:52,958
இங்க முன்னாடி என்ன
இருந்ததுன்றத மறந்துடாதே.

933
01:18:55,083 --> 01:18:56,916
இங்க முன்னாடி என்ன இருந்ததுன்றத
என்னால மறக்கவே முடியாது.

934
01:18:59,166 --> 01:19:01,458
இதுல ஒரு நல்ல விஷயமும் நடந்திருக்கு.

935
01:19:03,833 --> 01:19:06,875
நமக்குக் கிடைக்காத ஒரு எதிர்காலம்
ஒருவேளை இவங்களுக்குக் கிடைக்கலாம்.

936
01:19:15,416 --> 01:19:16,250
நாம போலாம்.

937
01:19:17,333 --> 01:19:19,583
இந்த சூட் போட்டா ஏதோ
கட்டி வச்ச மாதிரி தோணுது.

938
01:19:22,791 --> 01:19:25,750
நீ உன் அப்பா கூட இரு. நான் அப்புறமா
படகுத் துறையில உன்னை பாக்குறேன்.

939
01:19:28,000 --> 01:19:29,333
- அப்புறம் பாக்கலாம்.
- பை.

940
01:19:38,333 --> 01:19:41,708
இங்க வளர்ந்த கதைகள் எனக்கு
போர் அடிக்கும்னு நீங்க சொன்னீங்களே.

941
01:19:52,083 --> 01:19:53,375
மாத்தேயோ கார்சியா.

942
01:19:55,125 --> 01:19:56,208
அவன் தான் என் முதல் காதல்.

943
01:19:57,208 --> 01:19:58,749
நாங்க சின்ன வயசுல சந்திச்சோம்,

944
01:19:58,750 --> 01:20:03,375
அப்புறம் டீனேஜ்ல எங்களால
ஒருத்தரையொருத்தர் விட்டுப் பிரியவே முடியல.

945
01:20:06,125 --> 01:20:10,375
அவன்தான் நான் சுவாசிச்ச காத்து,
நான் நீந்துன தண்ணி.

946
01:20:12,208 --> 01:20:15,666
நாங்க எப்பவும் எதிர்காலத்தைப் பத்தியும்
எங்க பிளான்ஸ் பத்தியும் பேசுவோம்…

947
01:20:19,166 --> 01:20:20,666
அப்புறம் எல்லாம் மாறிடுச்சு.

948
01:20:22,625 --> 01:20:23,500
உங்க அம்மா இறந்துட்டாங்க.

949
01:20:26,083 --> 01:20:29,125
நான் அந்த மாதிரி ஒரு வலியை
இதுவரைக்கும் அனுபவிச்சதே இல்ல.

950
01:20:32,333 --> 01:20:34,958
இந்தத் தீவோட ஒவ்வொரு பகுதியும்
அவங்களைத்தான் ஞாபகப்படுத்துச்சு.

951
01:20:38,750 --> 01:20:41,625
இங்கிருந்து தப்பிச்சு போக நினைச்சேன்…
இங்கிருந்து தூரமாப் போக நினைச்சேன்…

952
01:20:43,041 --> 01:20:44,458
நான் அவனையும் என் கூட வர சொன்னேன்.

953
01:20:45,541 --> 01:20:46,375
கெஞ்சிக் கேட்டேன்.

954
01:20:49,000 --> 01:20:52,250
அவன் தன் குடும்பத்தையோ இல்ல
பிசினஸையோ விட்டுட்டு வர விரும்பல.

955
01:20:54,791 --> 01:20:57,790
நாங்க வருஷக்கணக்கா கடிதம் எழுதிப்போம்,

956
01:20:57,791 --> 01:20:59,500
ஆனா ஒரு நாள் அது வர்றது நின்னுடுச்சு.

957
01:21:06,958 --> 01:21:08,749
அதனால, நாங்க இங்க ஹோட்டல் கட்டுறோம்

958
01:21:08,750 --> 01:21:11,040
அந்த நிலத்தை வாங்குறோம்னு
தெரிஞ்சப்போ, அவனுக்கு உதவ

959
01:21:11,041 --> 01:21:12,708
ஒரு வாய்ப்பு கிடைச்சதுன்னு
உடனே ஒத்துக்கிட்டேன்.

960
01:21:15,916 --> 01:21:17,166
நீங்க என்கிட்ட சொல்லிருக்கலாம்.

961
01:21:18,500 --> 01:21:19,333
ஆமா.

962
01:21:20,458 --> 01:21:24,290
இப்போ நான் அவங்க குடும்பக் கனவுகளை
திருடுன ஒரு ஆளா நிக்கிறேன்.

963
01:21:24,291 --> 01:21:25,875
இல்ல. இல்ல.

964
01:21:31,125 --> 01:21:32,541
உங்களால முடிஞ்சதை செஞ்சீங்க, அம்மா.

965
01:21:34,208 --> 01:21:35,041
அது அவருக்கும் தெரியும்.

966
01:21:49,125 --> 01:21:50,291
நாம இன்னைக்கு தூங்காம இருக்கலாமா?

967
01:21:54,083 --> 01:21:55,500
நான் இதுவரை
சூரிய உதயத்தை பாத்ததே இல்ல.

968
01:21:57,083 --> 01:21:58,208
நீ என்ன சொல்ற?

969
01:21:59,500 --> 01:22:00,333
தண்ணியில இருந்தா?

970
01:22:01,916 --> 01:22:02,750
எங்கிருந்துமே இல்ல.

971
01:22:05,500 --> 01:22:06,333
சரி,

972
01:22:08,583 --> 01:22:11,041
நான் உனக்கு இருக்கிறதிலேயே
சிறந்த ஒரு இடத்தைக் காட்டுறேன்.

973
01:22:43,750 --> 01:22:44,583
பாரு.

974
01:22:56,500 --> 01:22:58,833
உன்னோட முதல் சூரிய உதயத்தை
எனக்காக மிச்சம் வச்சதுக்கு நன்றி.

975
01:23:02,041 --> 01:23:04,708
என்னோட எல்லாத் தொடக்கங்களும்
எல்லா முடிவுகளும் உனக்குத்தான்.

976
01:23:38,208 --> 01:23:39,458
அம்மா, ஏதாவது பிரச்சனையா?

977
01:23:41,041 --> 01:23:42,791
நீ எப்போ மாத்திரை சாப்பிடுறதை நிறுத்துன?

978
01:23:50,708 --> 01:23:52,458
நாம இங்க வந்து ரெண்டு நாள் கழிச்சு.

979
01:23:56,708 --> 01:23:57,958
அது என்னை எதையுமே உணர விடாம பண்ணுச்சு.

980
01:23:58,541 --> 01:24:01,040
அம்மா, எனக்கு இந்த ஒரு கோடை காலமாவது
எதையாவது உணர முடிஞ்சா போதும்னு நினைச்சேன்.

981
01:24:01,041 --> 01:24:03,540
நான் ஒரு முட்டாள்.
உன்னை தனியா விட்டிருக்க கூடாது.

982
01:24:03,541 --> 01:24:05,499
- நிறுத்துங்க! இல்ல.
- நான் உன் கூடவே இருந்து

983
01:24:05,500 --> 01:24:08,540
- மாத்திரை சாப்பிடுறியானு பாத்திருக்கணும்!
- இல்ல, இது என் முடிவு.

984
01:24:08,541 --> 01:24:10,707
நீ எல்லாத்தையும்
இன்னும் மோசமாக்கியிருப்ப!

985
01:24:10,708 --> 01:24:13,499
எனக்குக் கவலை இல்ல. எனக்குக் கவலை இல்ல.

986
01:24:13,500 --> 01:24:14,666
- எனக்கு கவலை இருக்கு.
- எனக்கு இல்ல.

987
01:24:15,666 --> 01:24:17,582
- சரி.
- நீங்க என்ன பண்றீங்க?

988
01:24:17,583 --> 01:24:19,665
- போலாம் வா, நாம கிளம்புறோம்.
- இல்ல. இல்ல, நாம போகல.

989
01:24:19,666 --> 01:24:20,915
- நாம கிளம்புறோம்.
- வேணாம்.

990
01:24:20,916 --> 01:24:23,832
இல்ல, ப்ளீஸ். அம்மா, நான்
முதன்முதலா சூரிய உதயத்தைப் பாத்தேன்.

991
01:24:23,833 --> 01:24:24,957
பாத்தியா? அது ரொம்ப சூப்பர்.

992
01:24:24,958 --> 01:24:27,332
என்னால உணர முடியுது, ஹூலியன்
என்னைத் தொடுறதை உணர முடியுது,

993
01:24:27,333 --> 01:24:29,791
அப்புறம் என் மேல படுற
கடல் தண்ணியையும் உணர முடியுது.

994
01:24:31,416 --> 01:24:33,666
ஞாபகம் வச்சுக்கத் தகுதியான
ஒண்ணு இங்க இருக்கு.

995
01:24:36,666 --> 01:24:37,958
நான் இங்கேயே இருக்க நினைக்கிறேன்.

996
01:24:40,458 --> 01:24:41,500
எனக்கு வாழணும் போல இருக்கு.

997
01:24:43,791 --> 01:24:44,750
நீ இங்கேயே இருக்கணுமா?

998
01:24:45,958 --> 01:24:47,750
நீ வாழணுமா? இப்போ
உனக்கு வாழணும்னு தோணுதா?

999
01:24:48,250 --> 01:24:50,583
எவ்வளவு காலத்துக்கு, ரய்?
நீ எவ்வளவு நாளைக்கு வாழ நினைக்கிற?

1000
01:24:52,500 --> 01:24:55,250
நாம கிளம்புறோம். ஃபிளைட்டை சீக்கிரம்
புக் பண்ண லேனாகிட்ட சொல்லிட்டேன்.

1001
01:24:56,875 --> 01:24:57,874
இல்ல.

1002
01:24:57,875 --> 01:25:00,000
- உன் பொருட்களை எடுத்து வை, ரய். போலாம்.
- இல்ல, அம்மா!

1003
01:25:01,708 --> 01:25:03,666
- இல்ல.
- ரய்!

1004
01:25:07,458 --> 01:25:10,125
ரய்!

1005
01:25:11,666 --> 01:25:13,458
ரய், நீ எங்க போற?

1006
01:25:16,500 --> 01:25:17,333
ரய்!

1007
01:25:18,083 --> 01:25:18,916
ரய்!

1008
01:25:33,041 --> 01:25:34,083
ரய்!

1009
01:26:01,958 --> 01:26:03,040
நகரு, நகரு, நகரு!

1010
01:26:03,041 --> 01:26:03,875
ரய்!

1011
01:26:05,375 --> 01:26:07,833
ஹே, ஹே, ஹே.
ஒண்ணும் இல்ல. நீ நல்லா இருக்க, செல்லம்.

1012
01:26:08,333 --> 01:26:11,082
நீ நல்லா இருக்க. நான் இங்கதான் இருக்கேன்.
நான் இங்கதான் இருக்கேன்.

1013
01:26:11,083 --> 01:26:12,500
எல்லாம் சரியாயிடும்.

1014
01:26:15,458 --> 01:26:17,250
ஆமா. இதோ.

1015
01:26:18,875 --> 01:26:20,915
எஸ்.ஜே.டி சாண்ட் ஜோன் டி டியூ மருத்துவமனை

1016
01:26:20,916 --> 01:26:22,874
- ஹாய்.
- ஹே.

1017
01:26:22,875 --> 01:26:25,582
சரியான நேரத்துக்கு வந்த.
நான் போய் காஃபி குடிச்சிட்டு வரேன்.

1018
01:26:25,583 --> 01:26:27,458
- சரி.
- நான் இப்போவே வந்துடுவேன்.

1019
01:26:32,583 --> 01:26:33,833
இதோ இவ இருக்கா.

1020
01:26:34,458 --> 01:26:37,125
பெண்ணே, நான் உன்னை நினைச்சு
ரொம்பவே கவலைப்பட்டேன்.

1021
01:26:37,666 --> 01:26:40,625
நான் முன்னாடியே வந்திருப்பேன், ஆனா
என் பாஸ் என்னை வேலை செய்ய வச்சுட்டாரு.

1022
01:26:41,958 --> 01:26:44,125
நீ இதையெல்லாம் ரகசியமா வச்சிருந்திருக்க.

1023
01:26:46,125 --> 01:26:48,250
வலிப்பு நோய் அப்புறம் இந்தக் கட்டிகள்.

1024
01:26:48,833 --> 01:26:53,166
இதை டியூமர்னு நினைச்சுக் குழப்பிக்காத, ஆனா
ரெண்டுமே ஒரே மாதிரி கேவலமா தான் இருக்கும்.

1025
01:26:55,333 --> 01:26:56,500
இந்த ரகசியத்துக்காக மன்னிச்சிடு.

1026
01:26:57,500 --> 01:26:58,333
எனக்குப் புரியுது.

1027
01:26:59,208 --> 01:27:02,875
நீ ஜாலியா இருக்க ஒரு வழியைத் தேடுன,
அதான் என் பக்கம் வந்த.

1028
01:27:06,875 --> 01:27:08,833
ஜாலியான விஷயம்னா,
ப்ரிஷா எங்க, அவ இங்க இருக்காளா?

1029
01:27:09,625 --> 01:27:10,458
இல்ல.

1030
01:27:11,500 --> 01:27:13,916
எல்லா நல்ல விஷயங்களும்
ஒரு நாள் முடிவுக்கு வரணும் தான்.

1031
01:27:14,416 --> 01:27:15,624
அவ வீட்டுக்குப் போயிட்டா.

1032
01:27:15,625 --> 01:27:17,791
ஆமா. ஆனா நான் திரும்பவும்
அப்படிப் பண்ணுவேனா?

1033
01:27:21,250 --> 01:27:22,250
கண்டிப்பா பண்ணுவேன், அன்பே.

1034
01:27:41,750 --> 01:27:46,583
ஹூலியன்
நாம கண்டிப்பாப் பேசணும். நாம சந்திக்கலாமா?

1035
01:28:04,083 --> 01:28:05,000
என்ன நடந்தது?

1036
01:28:14,791 --> 01:28:15,791
ஏதாவது அடிபட்டுடுச்சா?

1037
01:28:18,166 --> 01:28:19,750
எனக்கு டியூபரஸ் ஸ்களீரோசிஸ் இருக்கு.

1038
01:28:22,291 --> 01:28:23,375
அதனால வலிப்பு வரும்.

1039
01:28:24,833 --> 01:28:25,791
பிறக்கும்போதே இருந்துச்சு.

1040
01:28:32,125 --> 01:28:34,333
நாம என்ன பண்ண முடியும்?
இதுக்கு சிகிச்சை இருக்கா?

1041
01:28:35,333 --> 01:28:36,208
ஆமா ஆனா இல்ல.

1042
01:28:37,083 --> 01:28:39,541
மருந்துகள் உதவும், ஆனா
எப்பவும் ஒரே மாதிரி வேலை செஞ்சதில்ல.

1043
01:28:41,750 --> 01:28:44,290
நான் இங்க வந்தப்போ, மாத்திரை
சாப்பிடுறதை முழுசா நிறுத்திட்டேன்.

1044
01:28:44,291 --> 01:28:45,416
ஏன்?

1045
01:28:46,666 --> 01:28:48,583
ஏன்னா அது என்னை எதையுமே
உணர விடாம பண்ணுச்சு.

1046
01:28:50,625 --> 01:28:52,791
ஹூலியன், எனக்கு இனிமேல்
அப்படி இருக்கப் பிடிக்கல.

1047
01:29:00,833 --> 01:29:04,083
- அறுவை சிகிச்சை ஒரு வழியா இருக்குமா?
- ஆமா, ஆனா அதுல ரொம்ப ஆபத்து இருக்கு.

1048
01:29:05,458 --> 01:29:06,708
என் ஞாபகங்கள் எல்லாம் போயிடலாம்.

1049
01:29:14,416 --> 01:29:15,333
அப்புறம்…

1050
01:29:16,333 --> 01:29:17,666
அது அவ்வளவு மோசமான விஷயமா?

1051
01:29:18,875 --> 01:29:19,750
நீ ஆரோக்கியமா இருப்பியே.

1052
01:29:21,333 --> 01:29:23,125
எனக்குத் தெரிஞ்ச எல்லாமே போயிடும்.

1053
01:29:30,291 --> 01:29:32,125
நீ இதையெல்லாம் என்கிட்ட ஏன் சொல்லல?

1054
01:29:35,583 --> 01:29:37,541
நான் இதையெல்லாம்
புரிஞ்சுக்க விரும்பினேன்.

1055
01:29:39,708 --> 01:29:40,750
எனக்காக.

1056
01:29:43,166 --> 01:29:44,625
நான் எதுக்காக வாழுறேன்னு.

1057
01:29:47,583 --> 01:29:48,916
அது இந்த இடம் தான்.

1058
01:29:52,416 --> 01:29:53,250
அது…

1059
01:29:55,375 --> 01:29:58,250
என் அம்மா அவங்களுக்குப் பிடிச்ச
வேலையைச் செய்யுறதைப் பாக்குறது.

1060
01:30:00,166 --> 01:30:03,250
அமாரா புது மேக்கப்
போட்டுக்கிறதைப் பாக்குறது.

1061
01:30:05,916 --> 01:30:07,875
உன் கூட ஒரு இருட்டான குகையில
உட்கார்ந்திருக்குறது.

1062
01:30:10,166 --> 01:30:12,666
ஏன்னா நீ அந்த இருட்டைக் கூட
அமைதியா உணர வைக்கிற.

1063
01:30:16,125 --> 01:30:17,750
அந்த ஞாபகங்களை இழக்குறது…

1064
01:30:20,375 --> 01:30:22,291
இல்ல புது ஞாபகங்களை
உருவாக்க முடியாம போறது…

1065
01:30:27,208 --> 01:30:28,541
அது மரணத்தை விட கொடூரமானது.

1066
01:30:42,583 --> 01:30:43,791
ஐ லவ் யூ, ஒரையா.

1067
01:30:50,708 --> 01:30:51,708
ஐ லவ் யூ, டூ.

1068
01:31:19,583 --> 01:31:20,458
ரய்?

1069
01:31:35,750 --> 01:31:36,583
ரய்.

1070
01:31:40,000 --> 01:31:40,833
ரய்.

1071
01:31:44,958 --> 01:31:45,791
ரய்.

1072
01:31:50,708 --> 01:31:51,625
ரய்.

1073
01:31:53,375 --> 01:31:54,208
ரய்!

1074
01:31:54,708 --> 01:31:56,833
ஒரையா! ரய்!

1075
01:31:57,333 --> 01:31:58,166
அடச்சே.

1076
01:32:06,791 --> 01:32:08,333
ரய். ரய்.

1077
01:32:09,208 --> 01:32:10,041
ரய், ப்ளீஸ்.

1078
01:32:16,666 --> 01:32:17,707
நாடித் துடிப்பு மோசமா இருக்கு.

1079
01:32:17,708 --> 01:32:20,791
- அந்த இடத்தில் அவள் மூச்சு நின்னுடுச்சு.
- என்னோட இரு, சரியா?

1080
01:32:21,375 --> 01:32:22,790
நான் இருக்கேன், சரியா?

1081
01:32:22,791 --> 01:32:24,541
அவ தாக்குப்பிடிக்குறா, ஆனா ரொம்பக் கஷ்டம்.

1082
01:32:25,333 --> 01:32:27,250
அவ நிலைமை மோசமாயிட்டு
இருக்குன்னு ஸ்கேன்ல தெரியுது.

1083
01:32:27,958 --> 01:32:31,125
உங்க முடிவு, ஆனா நாங்க கண்டிப்பா
அறுவை சிகிச்சை பண்ணிக்கச் சொல்லுவோம்.

1084
01:32:34,875 --> 01:32:38,165
- இதுல யோசிக்க என்ன இருக்கு?
- ரய் எப்பவுமே ஆபரேஷன் வேணாம்னுதான் சொன்னா.

1085
01:32:38,166 --> 01:32:41,250
அவளை எவ்வளவோ வருஷமா சம்மதிக்க வைக்கப்
பாத்தேன், அவ என்கிட்ட சத்தியம் வாங்கிட்டா.

1086
01:32:41,791 --> 01:32:44,666
அவளை நாங்க இப்போதைக்கு
கொஞ்சம் சீரா வச்சிருக்க முடியும்,

1087
01:32:45,708 --> 01:32:48,540
ஆனா ஆபரேஷன் பண்ணலன்னா
அவ நிலைமை இன்னும் மோசமாகும்,

1088
01:32:48,541 --> 01:32:50,166
அப்புறம் எல்லாம் காலத்தின்
கையிலதான் இருக்கு.

1089
01:32:51,625 --> 01:32:52,625
இசோல்டே.

1090
01:32:55,000 --> 01:32:56,750
எனக்கு இதுல இருக்குற ஆபத்து புரியுது,

1091
01:32:57,916 --> 01:33:00,041
ஒரையா தன் விருப்பத்தைப் பத்தி
என்கிட்ட சொல்லியிருக்கா.

1092
01:33:02,125 --> 01:33:05,874
ஆனா அவளைக் காப்பாற்ற
ஒரு வாய்ப்பு இருக்கும்போது,

1093
01:33:05,875 --> 01:33:08,000
அவ ஒரு சாதாரண வாழ்க்கை
வாழ வழி இருக்கும்போது,

1094
01:33:10,291 --> 01:33:12,875
ப்ளீஸ் அந்த முடிவை எடுங்கன்னு
நான் கெஞ்சிக் கேக்குறேன்.

1095
01:33:14,958 --> 01:33:18,791
அவ தன் வாழ்க்கையோட சிறந்த பகுதிகளை
இழந்துடுவோமோன்னு கவலைப்பட்டா.

1096
01:33:20,083 --> 01:33:21,333
ஆனா இது பலன் குடுத்தா,

1097
01:33:22,458 --> 01:33:25,041
இனி அவ உருவாக்கப்போற ஞாபகங்கள் தான்
அவளுக்கு பிடிச்சதா இருக்கும்.

1098
01:34:15,625 --> 01:34:17,500
என் அம்மாவுக்கு இருந்த
நோய்தான் அவளுக்கும் இருக்கு.

1099
01:34:18,750 --> 01:34:19,791
ரொம்ப வருத்தமா இருக்கு, இஸ்ஸி.

1100
01:34:24,875 --> 01:34:25,708
அவளுக்குத் தெரியுமா?

1101
01:34:28,416 --> 01:34:32,165
அவளை இவ்ளோ கஷ்டப்படுத்துற இந்த
ஒரு மோசமான நோய்க்கு நான்தான் காரணம்னா?

1102
01:34:32,166 --> 01:34:33,208
இல்ல, அவளுக்குத் தெரியாது.

1103
01:34:34,791 --> 01:34:35,958
அவ உன்னைக் குறை சொல்ல மாட்டா.

1104
01:34:38,791 --> 01:34:40,583
நான் குழந்தை பெத்துக்கணும்னு
பிளான் பண்ணவே இல்ல.

1105
01:34:42,666 --> 01:34:43,875
அது என் லிஸ்ட்லயே இல்ல.

1106
01:34:44,875 --> 01:34:45,708
இல்ல.

1107
01:34:46,500 --> 01:34:50,750
எனக்கு சரியா ஞாபகம் இருந்தா, நீ ஒரு பெரிய
பங்களா, மூணு காரு, குதிரை வேணும்னு நினைச்ச

1108
01:34:52,916 --> 01:34:53,833
எனக்கு அந்தக் குதிரை கிடைக்கவே இல்ல.

1109
01:34:55,500 --> 01:34:59,916
கர்ப்பமா இருப்பது தெரிஞ்சப்ப, வாழ்க்கைக்கே
அர்த்தம் கிடைச்ச மாதிரி உணர்ந்தேன்.

1110
01:35:02,375 --> 01:35:03,708
எனக்கு அவ ரொம்ப வேணும்னு தோணுது.

1111
01:35:05,958 --> 01:35:07,833
அதான் நான் அந்த ரிஸ்க்கை எடுத்தேன்.

1112
01:35:09,083 --> 01:35:13,541
அப்புறம் நீ ஒரு தைரியமான பெண்ணை வளர்த்து
அவளுக்கு அழகான வாழ்க்கையைக் கொடுத்திருக்க.

1113
01:35:16,875 --> 01:35:20,125
அதனால, என்ன நடந்தாலும் சரி, இஸி,
நீ எதுக்காகவும் வெட்கப்படத் தேவையில்லை.

1114
01:35:22,958 --> 01:35:23,791
எதுக்காகவும் வேணாம்.

1115
01:36:02,916 --> 01:36:04,957
- ஹே, வந்ததுக்கு நன்றி.
- ஆமா, கண்டிப்பா.

1116
01:36:04,958 --> 01:36:06,500
நமக்கு நிறைய வேலை இருக்கு.

1117
01:36:07,291 --> 01:36:10,375
ஆமா, எங்ககிட்ட சில வழிகள் இருக்கு,
ஆனா அது கொஞ்சம் சிக்கலானது.

1118
01:36:14,791 --> 01:36:15,833
நான் அதை வாங்கிக்குறேன்.

1119
01:36:29,208 --> 01:36:31,458
இது ரொம்ப நல்ல செய்தி, நன்றி.

1120
01:36:38,750 --> 01:36:40,083
- ஹூலியன்.
- இசோல்டே.

1121
01:36:40,791 --> 01:36:42,208
ஹாய். உட்காரு, உட்காரு.

1122
01:36:45,708 --> 01:36:46,708
நான்…

1123
01:36:50,041 --> 01:36:52,541
என்கிட்ட உங்களுக்குச் சொந்தமான
ஒண்ணு இருக்கு.

1124
01:36:58,875 --> 01:37:00,208
எனக்கு எட்டு வயசு இருக்கும்போது,

1125
01:37:01,416 --> 01:37:04,250
எங்க அப்பா அவரோட முதல் காதலிக்கு
எழுதின கடிதங்களை நான் பாத்தேன்.

1126
01:37:05,916 --> 01:37:07,916
அது யாருக்காக எழுதப்பட்டதுன்னு
நான் யோசிச்சுட்டே இருப்பேன்.

1127
01:37:10,250 --> 01:37:13,166
ஆனா இப்போ எனக்குத் தெரியும் இஸி யாருன்னு.

1128
01:37:24,458 --> 01:37:25,291
ஹே, கைய்ஸ்.

1129
01:37:27,875 --> 01:37:29,375
- ஹாய்.
- டாக்டர் கிட்ட பேசினியா?

1130
01:37:30,125 --> 01:37:32,500
நான்… இல்ல. இல்ல, நான்…

1131
01:37:33,708 --> 01:37:36,125
நான் இன்னும் பேசல.
அதுல எந்த மாற்றமும் இல்ல, ஆனா…

1132
01:37:38,208 --> 01:37:41,416
ஒரு புது முன்னேற்றம் இருக்கு.

1133
01:37:48,541 --> 01:37:51,958
அப்போ ஹோட்டல் கட்ட
ஒரு புது நிலத்தைக் கண்டுபிடிச்சிட்ட.

1134
01:37:54,916 --> 01:37:56,750
உன் பிசினஸ் உனக்கு எவ்ளோ
முக்கியம்னு தெரியும்.

1135
01:37:57,791 --> 01:37:59,875
காலம் கடந்துடுச்சுன்னு
நான் நினைச்சேன், ஆனா…

1136
01:38:00,583 --> 01:38:01,583
எப்பவுமே காலம் கடந்து போகல.

1137
01:38:04,666 --> 01:38:06,750
நீ சொன்னது சரிதான். இது என் வீடு.

1138
01:38:08,333 --> 01:38:09,666
நான்தான் இதப் பாதுகாக்கணும்.

1139
01:38:10,791 --> 01:38:11,666
அதனால…

1140
01:38:13,000 --> 01:38:15,000
நாங்க உன் பிசினஸ்ல முதலீடு செய்றோம்.

1141
01:38:17,625 --> 01:38:18,708
ரய் இதைத்தான் விரும்புவா.

1142
01:38:19,958 --> 01:38:20,833
இதத்தான் நானும் விரும்புறேன்.

1143
01:38:23,625 --> 01:38:27,125
உங்களுக்கும் இந்த மாதிரி ஒரு ஷர்ட்
வாங்கித் தரணும்னு நினைக்கிறேன்.

1144
01:38:32,708 --> 01:38:34,332
நன்றி, இஸ்ஸி.

1145
01:38:34,333 --> 01:38:36,166
நாம சேர்ந்து வேலை செய்ய ஆவலா இருக்கேன்.

1146
01:38:46,333 --> 01:38:47,333
எனக்கு இந்தப் படகு பிடிச்சிருக்கு.

1147
01:38:48,083 --> 01:38:48,916
இது நல்லா இருக்கு.

1148
01:38:50,250 --> 01:38:51,083
ஒரு நிமிஷம்.

1149
01:38:53,625 --> 01:38:54,458
ஆமா.

1150
01:38:56,041 --> 01:38:57,207
உடனே வர்ரேன்.

1151
01:38:57,208 --> 01:38:58,041
அவ கண் முழிச்சுட்டா!

1152
01:39:01,916 --> 01:39:03,166
திரும்ப வரவேற்கிறேன், செல்லம்.

1153
01:39:05,458 --> 01:39:06,291
ரய்.

1154
01:39:13,291 --> 01:39:17,125
என் ஞாபகங்கள் ஒன்னொன்னாத் திரும்ப வருது.

1155
01:39:21,083 --> 01:39:22,833
நான் அவனைத் தொடுற மாதிரி உணர்றேன்.

1156
01:39:24,541 --> 01:39:25,875
எனக்கு ஏற்கனவே தெரிஞ்ச ஒருத்தன்.

1157
01:39:30,708 --> 01:39:31,541
எனக்குத் தோணுது…

1158
01:39:34,666 --> 01:39:36,500
விதி இங்கேயும் என்னைத் தொடர்ந்து வருமா?

1159
01:39:42,333 --> 01:39:44,583
எதை நான் என் கடைசி கோடை காலம்,

1160
01:39:45,916 --> 01:39:47,916
என் முதல் அப்புறம் கடைசி
சூரிய உதயம்னு நினைச்சேனோ,

1161
01:39:51,416 --> 01:39:54,375
அது என் வாழ்க்கையோட
ஒரு தொடக்கமா முடிஞ்சது.

1162
01:40:03,208 --> 01:40:04,083
என் பெயர் ஹூலியன்.

1163
01:40:06,083 --> 01:40:08,708
த லாஸ்ட் சன்ரைஸ்

1164
01:44:50,208 --> 01:44:52,290
வசனங்கள் மொழிபெயர்ப்பு மேனகா மணிகண்டன்

1165
01:44:52,291 --> 01:44:54,291
படைப்பு மேற்பார்வையாளர்
கே.ஆர்.கீர்த்திகா



